நிரன்ஜ் ஏதோ நிபகத்தில் ஒரு வீட்டின் முன் நிறுத்தினான்.... அது அவன் பாதி நினைவுகளின் சங்கமம்..... ஆம் அது அவனது சரிபாதி ஆனவள் பிறந்து வளர்ந்த இல்லம்.......அவன் திரும்பி செல்ல நினைக்கும் வேளையில் , மாமா என ஒரு ஆண்குரலொளிக்க திரும்பினான்....
ரியாவின் தம்பி விக்கி அங்கு வந்தான்.
மாமா... வாங்க உள்ள.... எப்படி மாமா இருகிங்க...என பேசிக்கொண்டு வீட்டிற்குள் அழைத்து சென்றான்.உள்ளே சென்றதும் ..
அம்மா யாரு வந்துருக்காங்க பாருங்க-விக்கி
உடனே வெளியில் வந்து பார்த்தார் அவன் அம்மா பாரதி.வாப்பா.. நல்லாற்கயானு கேட்க என்னால முடியல... உடம்ப பத்திரமா பார்த்துகோப்பா என சோக குரலில் கூறினார், பாரதி.
ம்ம் சரிங்க ஆன்டி..
நீங்க நல்லார்கிங்களா?
மாமா எங்க?-நிரன்ஜ்.மாமா உள்ள இருக்காருப்பா என சொல்லி கொண்டிருக்கும் போதே... ரியாவின் தந்தை வெங்கடேசன் அங்கு வந்தார்.
வாங்க மாப்ள என்று கண் களங்கியவர்.... அவனை கட்டி தழுவி ஆறுதல் அளித்தார்.
ரியா கூடிய சீக்ரம் உங்ககிட்ட வந்துருவாப்பா.. கவலபடாத.. அவளா வரவரைக்கும் நாம அவளதேடக்கூடாது .. மீறி தேடுனோம்னா உயிரோட இருக்கமாட்டனு லட்டர்ல எழுதீட்டு போய்ருக்காப்பா.. அதான் அவள தேடவே பயமா இருக்கு ..... ஆனாலும் பயனும் ..நீங்களும் டிடக்டிவ் வச்சு தேடிட்டிருக்கீங்க.
... அவளுக்கு தெரியாம பார்த்துகோங்க. என் பொன்னு மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்குபா... அவ உங்கழுக்காகவே காத்துகிட்டிருந்தவ.. அவ இப்டி ஒரு முடிவு எடுத்துருக்கானா கண்டிப்பா ஸ்டராங்கான வேலிட் ரீசன் இருக்கும்..
அதுக்காக உங்க வாழ்கய வீனடிக்க நா விரும்பல... பாட்டி போன் பன்னிருந்தாங்க.. எல்லார்த்தையும் சொன்னாங்க..ஏற்கனவே ஒன்றரை வருசம் ஆய்டுச்சு... எங்க கஷ்டம் எங்களோட போகட்டும்... நீங்க வாழ்கைல்ல அடுத்த கட்டத்துக்கு போகனும்.. என்றார் ரியாவின் தந்தை.என்ன மாமா சொல்றீங்க நீங்கழும்மா..... அவ என்னோட ரியா அவ வந்தாழும் வராட்டாலும்.... நா அவழுக்காக என் மூச்சு என்ன பிரியர வர காத்துகிட்டிருப்பேன் என கூறியவன் அழுதுகொண்டிருந்த ரியாவின் தாயிடம் ... கவலபடாதிங்க ஆன்டி ரியாவ சீக்ரம் கண்டுபிடிச்சருலாம் என கூறினான்.
அப்போது விக்கி,நிரன்ஜை கட்டி தழுவி... யூ ஆர் கிரேட் மாமா .... உங்கள எப்படி அக்கா விட்டுபோனா .. எப்படி அவழுக்கு உங்கள விட்டு போக மனசு வந்துச்சு என கொந்தளித்தான்...
இதற்கிடையில் . ரியாவின் தாயார் நிரன்ஜிடம் .. தம்பி நீங்க இங்க வந்து ரொம்ப நாள் ஆகுது... நீங்க ஆபீஸ் போகனுண்னு தெரியும்.. இன்னைக்கு விக்கியும் வீட்டுல இருக்கான்... நா உங்களுக்குள்ள என் பொன்ன பார்க்கரேன்.. என் கையாள உங்கழுக்கு சமைச்சு போட்டு ரொம்ப நாள் ஆகுது... இன்னைக்கு மதியம் வர இங்க இருந்து சாப்பிட்டு போங்க, என் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்...-பாரதி.பாரதி அம்மாவை தன் தாய் போல் நினைப்பவன் ..எப்படி அவர் வேண்டுகோளை மறுப்பான்..
பின் நிரன்ஜ் ஆபிஸ்ஸிற்கு போன் செய்து ...அன்று உள்ள மீட்டீங்ஸை போஸ்ட்போன் செய்துவிட்டு முதல் மாடியில் இருக்கும் ரியாவின் அறைக்கு சென்றான் .....
அவனை பின் தொடர்ந்து வந்த விக்கி... ரொம்ப தேங்க்ஸ் மாமா.. என் அக்கா ரொம்ப லக்கி.. உங்களமாதர கனவர் கிடைக்க ரொம்ப கொடுத்து வச்சுருக்கணும் என்றான்.
இல்ல விக்கி நான்தான் அவ கிடைக்க கொடுத்துவச்சுருக்கணும்.... நா இப்போதான் அவளுக்காக காத்துகிடடிருக்கேன்... ... எங்களுக்கு மேரேஜ்னு ஒரு பந்தம் இருக்கு ... அவள பத்தி எனக்கு நல்லா தெரியும்... இப்ப நா வெய்ட் பண்றதுல அர்த்தம் இருக்கு .ஆனா அவ நா வருவனா ..... வரமாட்டனானு எந்த ஒரு ஹோப் இல்லாதப்போகூட எனக்காக உங்க வீட்ல இருக்குற எல்லார்தயும் எதிர்த்து நின்னு எனக்காக காத்துகிட்டிருந்தா....... என ரியாவின் புகைபடத்தை பார்துகொண்டிருக்க.. அவன் கண்கள் நீரினுள் மூழ்க ஆரம்பித்தன...
பின் விக்கி அவனை தனிமையில் விட எண்ணியவன் நிரன்ஜிடம் , மாமா ஒரு வேலை இருக்கு கொஞ்சம் அர்ஜென்ட்.. நா ஒரு மணி நேரத்ல வந்துட்ரேன் ... நீங்க ரெஸ்ட் எடுங்க என சொல்லி கிழம்பினான்...பின் நிரன்ஜ் தனிமையில் தன் மனைவி ரூமை சுற்றி வந்து பெட்டில் அமர்ந்து......
4ஆண்டுகளுக்கு முன் நடந்தவற்றை சிந்திக்க தொடங்கினான்............................................................
Finally.......
From next chapter.....
Flashback starts.......
YOU ARE READING
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
General Fiction"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want...