பகுதி-1

17.6K 325 30
                                    

காலை கதிரவன் ஒளி அழகோவியம், படுக்கை அறையில் உள்ள கண்ணாடியின் வழி ஊடுருவி வர மெல்ல கண் திறந்து வழக்கம்போல் கைபேசியில் கள்ளங்கபடமற்று சிரித்துகொண்டு, அதே சமயம் நினைவாள் தன்னை சிதைத்து கொண்டிருக்கும் தன் நாயகனின் படத்தை பார்த்து "ஐ லவ் யூ டா.. ஐ மிஸ் யூ வெரி ஃபேட்லி.. சாரி ஃபார் எவ்ரிதிங்க் ஃபிளீஸ் ஃபர்கீவ் மி" என கூறி தன் படுக்கையை விட்டு எழுகிறாள்... நம் கதையின் நாயகி.
எழுந்து காலை வேலைகளை முடித்து சத்தத்துடன் உறங்கிக் கொண்டிருக்கும் தன் இரு அன்புச்செல்லங்களை கண்குளிர கண்டுகொண்டிருக்கிறாள்.
அருகில் தன் தாய் நிற்பதை உணர்ந்ததாலோ என்னவோ சரணும் சிறிது நேரத்தில் நிவினும் மலர் மொட்டு விரிந்து அதனுள் முத்திருப்பது போல தங்கள் இமை திறந்து தன் அன்னையை, பிள்ளை சிரிப்பில் ஆனந்தபடுத்துகின்றனர்.
அப்போது அங்கு வந்த வள்ளி பாட்டி.. ரியாவிடம், பாரு ரியாம்மா உன் பிள்ளைங்க எப்படி அவங்க அப்பன மாதிரி சிரிச்சுகிட்டே எழராங்கணு.. வள்ளி பாட்டியின் வார்த்தைகளை கேட்டவுடன் தன் கணவனின் நினைவில் பாட்டியை கட்டி கொண்டு சிறு பிள்ளை போல அழ துவங்கினாள்...
ரியா அழாதம்மா இன்னும் கொஞ்ச நாள்தாம்மா ..எல்லாம் சரியாகும்மா... கடவுள் இருக்காரும்மா..அந்த மிருகங்கள அவரு பாத்துபாரு.... என வள்ளி அவளை சமாதனபடுத்தினார்....பாட்டி அவருக்கு கல்யாணமாயிருக்குமா ... என்ன ஏத்துபாரா... என சத்தமுடன் அழ ஆரம்பித்தாள்....
என்னமா ரியா அந்த பிள்ளைய பத்தி உனக்கு தெரியாதா... வாழ்க்க முழுசா உனக்காக காத்திருந்த பிள்ளமா அது, என பாட்டி கூறிகொண்டிருக்க....
தன் தாய் அழுவதை கண்டு இரு குழந்தைகளும் அழ தொடங்கினர்...உடனே ரியா தன் கண்களை துடைத்து அவர்களை தூக்கி அழுகயை நிறுத்தி ..பால் ஊட்டி தொட்டிலில் இட்டாள்...பின் வள்ளி பாட்டிக்கு சமையலில் உதவ சென்றாள்..

ஆம் நம் நாயகி கணவனை பிரிந்து கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாக டெல்லியில் வாழ்ந்து வருகிறாள்...தற்போது மகப்பேறு விடுப்பில் இருக்கிறாள்...வள்ளி பாட்டிக்கு இவர்கள் வாழ்வில் நடந்த பிரச்சனைகள் அனைத்தும் தெரியும் அதனாலோ என்னவோ தான் தூக்கி வளர்த்த நிரன்ஜை விட்டு ரியாவுடன் வந்துவிட்டார்... ஆனால் இதுவும் அவனுக்காகதான்....

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora