பகுதி-36

5.7K 180 34
                                    


ஒரு நாள்
இரவு எட்டறை மணியளவில்... ரியா நவீனிடம் பேசுவதற்காக கால் செய்தால்......
பேசிக்கொண்டிருக்கையில் திடிரென நவீன், ரியா எக்ஸாம்கு  படிச்சாச்சா.....என கேட்டான்.

இல்ல இன்னும் முடிக்கல படிச்சுகிட்டே இருக்கேன்.....-ரியா.

ஹிம் சரி என சிறிது நேரம் பேசிவிட்டு அவள் படிக்க சென்றாள்.

விடியற்காலை நான்கு மணியளவில் படித்து ரூமிற்கு வந்த ரியா மொபைலை பார்தாள்...
ஓபன் செய்தவுடன் மெசேஜ் நோட்டிபிகேசன் இருந்தது....
நவீன் தான் குட்  நைட் மெசேஜ் அனுபிற்பான் என ஓபன் செய்தவள் முன்னாள் ஒரு பக்க அளவில் அவளுக்கான அதிச்சி காத்துக்கொண்டிருந்தது

இரவு ஒரு மணி- மெசேஜ் வந்த நேரம்.

நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்,
அது.... வந்து நீ சொன்னது சரிதான் ரியா.....
நீ யாருனு எனக்கு தெரியாது....
நா யாருனு உனக்கு தெரியாதுதான்.
நம்ம ரிலேசன்சிப் பத்தி நா இப்பதான் ரியலைஸ் பன்னேன்...

தெரியாத ஒரு உறவ எப்படி கண்டினியூ பன்ன முடியும்...
உன்ன பொருத்தவர நா யாருனே தெரியாது..எனக்கும் அப்படிதான்... அது அப்படியே இருக்கட்டும்.... இனி நாம்ம பேசவேண்டாம்.....
இப்படி சொல்றனு நீ என்ன தப்பா நெனைக்காத.... இப்படி இருக்கறதுதான் நமக்கு நல்லது..

நீ எப்பயும் சொல்லுவல்ல... உன் அப்பா அன்ட் உன் பேம்லிக்காக அவங்க உன்ன நம்பி அனுபிற்காங்க அதுக்காக... நல்ல படிச்சு லைப்ல முன்னேறனும்னு.... அதுக்காக நல்லா ஹார்டுவொர்க் பன்னு.. ஆல் த பெஸ்ட் ஃபார் யுவர் பியூச்சர்...  உன் பேம்லிய நல்லா பார்த்துக்கோ.. உன்னயும்தான்.....  குட் ஃபாய் குழந்த...... -நவீன்.

இதை பார்த்து திடுக்கிட்ட அவளுக்கு மேற் கொண்டு என்ன செய்வதென்றே புரியவில்லை.

அவள் கண்களில் நீர்நிரம்பி வழிந்தது.
நண்பர்கள் உறங்கி கொண்டிருந்ததால் சத்தமிடமால் அழ துவங்கியவளுக்கு என்ன செய்வது அவனிடம் என்ன சொல்வது என ஒன்றும்புரியவில்லை....

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora