மூவரும் ஷாப்பிங் முடித்து அடுத்தநாள் தமிழகம் சென்றனர்.
அவன் செல்லும் வழிதோறும் ரியாவின் முகம் வந்து வந்து மறைந்தது...
நா ஏன் அந்த பொன்ன பத்தி நெனச்சுகிட்டிருக்கேன்.. அவங்கள தாங்கி பிடிச்சவுடனே எனக்கு ஏன் புரியாத ஒரு உணர்வு வந்தது. அவங்க ஆல்ரெடி மேரேஜ் ஆகி கைல குழந்தயோட இருக்காங்க... ச்ச அவங்கள நெனைக்க கூடாது....ஆனா ஒரு நாளைக்கு எத்தன பேர்த்த பார்கறோம்... ஏன் இவங்க மட்டும் இப்படி நிக்கறாங்க மனசுல...
டேய் மடையா அவங்கள நீ கீழ விழாம காப்பாத்துன.. அதுமில்லாம அவங்களுக்கு உன்ன தெரிஞ்சுருக்கு.. எப்படியும் பழக்கமானவங்களாதான் இருப்பாங்க அதுமில்லாம நீ அவங்க ஆன்சர் சொல்லவிடாம கிழம்பி வந்துட்ட... லைப்ல பாதில விட்ட விஷயம்தான் இப்படி கனவா வரும்.. என அவன் மனம் அவனுக்கு சமாதானம் கூறியது.ஆம் நம் நவீனுக்கு கடந்த பதினைந்து வருடங்களாக நடந்த நிகழ்வுகள் எதுவும் நினைவில் இல்லை...
ஒரு வருடத்திற்கு முன்...
ஹாஸ்பிட்டலில் நவீன் ஒரு வார அப்சர்வேசனிற்கு பின் கண் விழித்தான்... அதன் பிறகு அவன் முன்பு போல் நடந்து கொள்ளவில்லை.... ரியாவை பற்றியோ நிஷாவை பற்றியோ எதும் கேட்கவில்லை.... பூர்விக்கு திருமணம் ஆனதே அவனுக்கு புதிதாகதான் இருந்தது.... அவன் பதினைந்து வருடத்திற்கு முன்பு நடந்த விஷயங்களை பற்றிதான் பேசிக்கொன்டிருந்தான்.
அவன் அனைத்தையும் மறந்ததை கண்டு அனைவரும் அதிற்சியில் ஆழ்ந்தனர்.... ஆனால் ஒரு சில நிமிடங்களிலேயே அதிலிருந்து வெளிவந்த நிஷாவுக்கோ அவளது திட்டத்தால் மகிழ்ச்சியாக இருந்தது. அனைத்தையும் தனக்கு சாதகமாக்க எண்ணினாள்.அப்பொழுதுதான் அவனுக்கு நியாபக மறதியை பற்றி அவனிடம் கூறினர். அதிர்ச்சியான விஷயத்தை அவனிடம் கூறகூடாது என மருத்துவர்கள் கூறியதால் அதற்கு மேல் அவர்கள் எதைபற்றியும் அவனிடம் கூறவில்லை.
ஒரு மாதம் பெட் ரெஸ்டில் இருந்தான்.வீட்டிற்கு சென்ற சரோஜா பாட்டிக்கோ அவள் எழுதிய கடிதம் கிடைத்தது..
எல்லாரும் என்ன மன்னிச்சுடுங்க... உங்கள விட்டு போக எனக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல.. நீங்க எனக்கு கிடைச்ச பெஸ்ட் பேம்லி.... அன்ட் நா உங்கள விட்டு போனதால... எல்லார்தயும் ரொம்ப மிஸ் பன்னுவேன்.... எவனால எனக்கு இப்டி ஒரு பேம்லி கிடைச்சுதோ அவனே எனக்கு அப்டி ஒரு துரோகம் பன்னத என்னால ஏத்துக்க முடியல பாட்டி....
என்னால ஒரு நிமிசம் கூட அங்க இருக்க முடியல... நீங்க யாரும் இல்லாதப்ப நா இங்கிருந்து போறேன் பாட்டி... இனி என் லைப்ல நவீன்கு எந்த இடமும் இல்ல...
என்ன நெனச்சு கவல படாதிங்க... உங்க பேத்தி எங்கயோ உயிரோட இருப்பேன்... நா எப்பயும் திரும்பி வர மாட்டேன்... நா பன்றது பெரிய தப்புதான் முடிஞ்சா என்ன மன்னிச்சுடுங்க.. பிளீஸ்.
YOU ARE READING
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
General Fiction"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want...