மறுபக்கம் , தமிழகத்தில்.........
நிரன்ஜ் எழுந்திருப்பா... மணி 7 ஆகுது.. ஆஃபீஸ்கு டைம் ஆகுது........ என அவன் பாட்டி.. சரோஜா அவனை எழுப்பினார்.....
எப்போதுமே புன்சிரிப்புடன் எழும் அவன் முகத்தின் சிரிப்பை இப்போது யாரோ திருடிவிட்டார்....
வழக்கம் போல நிரன்ஜ்ஜூம் பெட்ரூமில் கண்விழித்தவுடன் காணுமாறு இருக்கும் .... அவன் மனையாள் தன் நாக்கை உதட்டின் ஒரு ஓரம் தள்ளி கடித்துக்கொண்டு, அவன் காதை திருகி கொண்டிருக்கும் வண்ணம்அமைந்த அவர்கள் புகைபடத்தை
கண்டு "எங்கடி போன என்னையே எடுத்துகிட்டு" என மனதில் ஒரு தவிப்புடன் எழுந்து தன் பணிக்கு கிழம்ப ஆயத்தமானன்.....
டைனிங்கில் அவன் தாத்தா, செல்வம் காலை உணவு உட்கொண்டிருந்தார்.அவரருகில் இவனும் சென்று சாப்பிட ஆரம்பித்தான். அப்போது சரோஜா , தன் கணவனிடம் சைகையில் ஏதோ காட்டிவிட்டு..... நிரன்ஜ்டம் திரும்பி, உன்கிட்ட ஒரு விசயம் பேசனும் நிரன்ஜ் என கேட்கும்போதே , அமைதியாக மேலே பார்த்தவன், சரோஜாவின் தயக்கத்தை கண்டு பொருளுணர்ந்தவனாய்.......பாட்டி எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆகுது எதா இருந்தாலும் வந்து பேசலாம் என கைகழுவி விட்டு சென்றான்.....
அவன் சென்ற திசையில் பார்த்துகொண்டிருந்த சரோஜாவிற்கு கண்ணீர் அருவியாய் கொட்டியது..... அப்போது செல்வம் அங்கு வந்து,. விடும்மா நைட் பேசிக்கலாம்...... என சமாதானபடுத்தினார்.காரில் நிரன்ஜ் ஏதோ நினைவுகளில் மூழ்கி கொண்டிருந்தான் ...... அப்போது ரேடியோ சேனலில் ,"கண்ணைவிட்டு கன்னம் பட்டு எங்கே போனாய் என் கண்ணீரே " என்ற பாட்டிசைக்க அவன் கண் கலங்கின... இந்நாபகங்களில் ஆபிஸ்ஸிற்கு செல்லும் வழியைவிட்டு வேறு சாலையில் சென்று ஏதோ ஒரு வீட்டின் முன் காரை நிறுத்தினான்..... நிறுத்திய பின்புதான் தெரிந்தது ...அவன் வழிமாறி வந்தது..... மேலும் அது அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட வீடு..... அவனின் பாதி நினைவுகளின் சங்கமம்.....
----------------------------------------------------
என்னப்பா எல்லாரும் அழுதுட்டே இருக்காங்கனு பார்கறீங்களா..... இன்னும் 2பகுதிதான் இதுபோல... கவலபடாதிங்க...............
![](https://img.wattpad.com/cover/85892820-288-k44810.jpg)
YOU ARE READING
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
General Fiction"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want...