பகுதி-47

6.2K 198 37
                                    

அடுத்தநாள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர்...
இருவரும் நார்மலாக பேசுவதை கண்ட கௌதமும் அணுவும் ஆச்சரியத்துடன் ஆனந்தமும் அடைந்தனர்.

கௌதம் என்ன நடக்குது இங்க, நேத்து நம்மள வெளில விரட்டிட்டு இங்க ஏதேதோ நமக்கு தெரியாம நடந்திருக்கு போலயே... என்ன நடந்திருந்தாலும்... இப்படி அவங்கள பார்கறப்போ எனக்கு ஆகாயத்துல பறக்குற மாதற இருக்கு...

ஹலோ மேடம்... நீங்க பறந்துகிட்டுதான் இருக்கிங்க... அன்ட் நீங்க நினைக்கற அளவு எதுவும் நடக்கல என அவளிடம் கூற... நம்பிட்டேன் என அணு அவளுக்கு போக்குகாட்டினாள்.

அனைவரும் ஒரு வழியாக இந்தியா வந்தனர்.

அடுத்த நாள் முதல்  நார்மலாக பேசிக்கொண்டு கிழம்பும் இருவரின் ஒத்துமையை வீட்டில் உள்ளவர்கள் கவனிக்க தவறவில்லை.
தான் செய்துவைத்த திருமணம் மலர துவங்கிவிட்டது என்ற நிம்மதி சரோஜா பாட்டிக்கு கிடைத்தது.

அடுத்து வந்த மூன்று மாதங்களும் காதலில் ( இருவரும் ஒப்புக்கொண்டு ....  நேரில் காதலிக்கும் காதலில்)ஆனந்தமாக கழிந்தது....
இது வரை காதலித்ததிலிருந்து .... அதை விட பேச ஆரம்பித்து முதலிலிருந்தே  சண்டையிட்ட இருவரிடையே சில செல்ல சண்டைகளை தவிற மற்ற சண்டை  வந்ததில்லை.... அவ்வாறு இருந்தவர்களின் வாழ்வில் யார் கண் பட்டதோ  அவர்களின்  வாழ்வில் ஒரு பயங்கர இடியே இறங்க ஆயத்தமானது.

ஆம் நிஷா இந்தியாவில் உள்ள தங்கள் கம்பெனியின் பொறுப்பை ஏற்று இங்கு வந்தாள்.

இந்தியா அவளுக்கு புதிது என்பதால்  நிரன்ஜீன் பங்களாவிற்கு அருகில் உள்ள பங்களாவை வாங்கி அங்கு தங்கினாள்.

அவன் வேறு ஒருவளுக்கு சொந்தமானவன் என்றாலும் அவளால் அவனை மறக்க முடியவில்லை.... அவர்களின் நெருக்கத்தையும் காதலையும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை....

நிரன்ஜீடம் அதிகம் நேரம் செலவிட நினைத்தாள்...
தெரியாத புதிய ஊர்... தெரியாத இடம் எனக்கூறி அவனுடன் அடிக்கடி வெளியில் செல்ல திட்டமிட்டாள். ரியாவின் முன் நிரன்ஜீன் கைபிடித்து நடப்பது.... அவனை டின்னருக்கு அழைப்பது .... இருவரிடையே பிரிவை உண்டாக்க முயல்வது என அவளின் ஆட்டம் துவங்கியது.

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora