பகுதி-8

8K 204 18
                                    

அடுத்து வந்த இரு நாட்களில் பாரதி அம்மா குணமடைந்து வீடு திரும்பினார்...

ரியா தன் பணிகளில் ஈடுபட்டாள்.

நிரன்ஜ் ஓரளவிற்கு தன் வேலைகளை முடித்து இன்னும் ஆறு மாத கால பணி யூ.எஸ்ஸில் இருப்பதால் அங்கு சென்றான்.

அனைவரும் தங்கள் பணிகளை செம்மையாக செய்து தங்கள் நிறுவனத்தின் தரத்தை உயர்த்தினர்.

நிரன்ஜ் கம்பெனியின் கட்டட பணிகள் முடிவடைந்து மற்ற பணிகள் நடந்து கொண்டிருந்தது.

யூ.எஸ்.ல் நிரன்ஜிற்கு இன்னும் மூன்றுமாத பணி உள்ளது.

ஹாய் நிரன்ஜ் இன்னைக்கு சீக்கரமா வந்துட்ட..-நிஷா
ஹிம் நிஷா கொஞ்சம் வொர்க் இருந்தது அதான்.-நிரன்ஜ்.

நிரன்ஜ் நீ ஆப்டர் நூன் ஃபிரியா??-நிஷா.

வேலைலாம் அதுக்குள்ள முடிஞ்சுரும்னு நினைக்குறேன்...... ஏன்?- நிரன்ஜ்.

உன்கிட்ட இம்பார்டன்ட் மேட்டர் ஒன்னு பேசனும்...என நிஷா கூற .... சரி காபி டே ல மீட் பன்னலாம் என்று நிரன்ஜ் ஒப்பு கொண்டான்.

காபி டேவில்....
ஹாய் நிஷா சாரி லேட் ஆய்டுச்சு இப்போதான் ஒர்க் முடிஞ்சது-நிரன்ஜ்.

இட்ஸ் ஓகெ பேபி நா வந்து 5மினிட்ஸ்தான் ஆகுது.-நிஷா.

வாட் பேபியா??? -நிரன்ஜ்.

ஆமா இனி எல்லாமே அப்படிதான்.... உன்ன எனக்கு நம்ம பர்ஸ்ட் மீட்டிங்ள இருந்தே பிடிக்கும்.... அதுக்கப்பரம் உங்கூட பழக ஆரம்பிச்சதுலருந்து உன்ன லவ் பன்ன ஆரம்பிச்சுட்டேன்... நீ இப்போ 1மன்த் இந்தியா போயிருந்த அந்த பிரிவப்போதான் தெரிஞ்சது நா உன்ன எவ்ளோ லவ் பன்றனு. நீயூம் அப்படிதானு எனக்கு தெரியும் ....  சொல்லுவ சொல்லுவனு பார்த்தா... என் பொறுமைய ரொம்ப சோதிச்சுட்ட.... இனி இங்கருந்து போகனுனா என்னயும் கூட்டிட்டு போ ....உன்ன விட்டு என்னால இருக்க முடியாது..என சொல்லி முடித்தாள் நிஷா.

சிறிது நேரம் சிலைபோல் நின்றவன் நிஷா உலுக்கியதால் நினைவிற்கு வந்து.... ஐம் சாரி நிஷா
.... நான் உனக்கு அந்த மாதரி எண்ணங்கள கொடுத்துருந்தா..
. நா உன்ன நல்ல பிரண்டா மட்டும்தான் நெனச்சன்.. ஒரு நொடி கூட நான் உன்ன அப்படியெல்லாம் நெனத்சதில்ல....என கூறினான்.

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now