பகுதி-29

6.3K 193 14
                                    

அணு கேட்ட கேள்விகளால் கண்களில் கண்ணீர் நிரம்பி காணப்பட்ட ரியா நீ சொல்றது சரிதான் அணு... நா நடிச்சுகிட்டுதான் இருக்கேன் என அழ ஆரபித்தாள்....
சிறிது நேரத்திற்குபின் தன் கடந்த காலத்தின் இனிமையான நினைவுகளை நினைத்து கண்ணீரை துடைத்து சிரித்தவள்..... நவீனோட ..... என்னோட கடந்தகால நினைவுகளாலதான் அணு நான் இன்னும் வாழ்ந்துகிட்டிருக்கேன்....என கூறி ஆரபித்தாள்.....

எட்டரை ஆண்டுகளுக்கு முன்,

        ரியாஸ்ரீ அன்ட் கௌதம் சென்னையில்  மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தனர்....
பிரஸ்ஸர்ஸ் டே முடிந்து அனாட்டமி, பிசியாலஜி , பயோஹெமிஸ்ட்ரீ என அவர்கள் மருத்துவபயணம் துவங்கியது....

இன்னோகரேஷனுக்கு பின் அடுத்து அனாட்டமி லேபிற்கு சென்றனர்....
அங்கு கடாவர்(டெட்பாடி) தனித்தனி இடங்களில் டேபுளில் இருந்தது... பின் அனைவரும் பேட்ஜ் பேட்ஜாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கடாவரின் முன்பும் நிறுத்தப்பட்டு வகுப்புகளை
ரியா,  கார்திக் , அர்ஜீன் , கௌசல்யா,  பவித்ரா, ரன்ஜனி ஒரு பேட்ஜூம் , அதற்கு அருகிலிருந்த டேபுலில் கௌதம், தீபன், சுபத்ரா , கலை, பிரவின், பரிதா ஒரு பேட்ஜாகவும் இருந்தனர்....  காலப்போக்கில் அனைவரும் நெருங்கிய நண்பராகி காலேஜையே ஒரு வழியாக்கினர்..... ரேகிங் மூலம்  சீனியரிடமும் பிரண்ட்ஸாகி தகராறின்றி நன்றாக காலம் தள்ளினர்.....
காலேஜ் ஹாஸ்டலில் ரியாவின் ரூம்மெட்ஸ் மதி , சுபத்ரா....

காலேஜ் வாழ்வில் அடியெடுத்து வைத்தவுடன் பேஸ்புக் ஓபன் செய்வது அதில் தங்களுக்குள் வீடியொ காலிங்.... குரூப் ச்சேட்,  வெளியில் ஊர் சுத்துவது என பறவையாய் பறந்தனர் நண்பர்கள் அனைவரும்......

நான்குமாதங்களுக்கு பின்   வழக்கம்போல அனைவரும்  கிளாஸ் முடித்து ஹாஸ்டலிற்கு வந்தனர்....

அனைவரும் ஓய்வெடுத்து பின் அரட்டையடித்து...பின் ரியா தன் பேஸ்புக் ஓபன் செய்தாள்.....  பொதுவாக அவள் யாரென்று தெரியாதவர்களின் பிரண்ட் ரெக்வஸ்டை அக்செப்ட் செய்வதில்லை.... இதற்கு முன் ஒருவரை அக்சப்ட் செய்திருந்தால் .... அவன் அவளை தங்கை எனக்கூறி போன் நம்பர் கேட்டு டார்சர் செய்து மொக்கை போட்டதால் அன்பிரண்ட் செய்துவிட்டாள்.....

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang