பகுதி-40

6.1K 182 29
                                    

ஆறுமாதங்கள் கழிந்தன......
அவளால் இனியும் பிரிவை தாங்க இயலாது தன் போனை எடுத்து அவனுக்கு கால் செய்து கட் பன்னினாள்.

நீ எப்ப புள்ள சொல்ல போற.... தப்பென்ன செஞ்சென் தள்ளி போற.. என்ற ரிங் டோன் நவீன் மொபைலில் ஒலித்து நின்றது..

பிரண்ட் வீட்டிற்கு நவீன் சென்றிருந்தான்.

ஹாலில் நண்பனுடன் டிவி பார்த்து கொண்டிருந்த அவன் தன் போனின் அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்தான்.

வந்து கொண்டிருக்கும்போது.... இப்போ கேட்டது நா ரியாவுக்கு வச்ச ரிங்டோன்தான....

அப்போ என் ரியா எனக்கு கால் பன்னிருக்காளா??? என அவனுள் பலவித உணர்வுகளும் ஆனந்தமும் தோன்றியது... உள்ளே விரைவாக சென்று உடனே அவளுக்கு கால் செய்தான்....

ஹலோ..... -நவீன்.

ஹலோ யாருங்க-ரியா.

(அட வழக்கம்போல ஆரபிச்சுட்டாடா)...
இல்ல இந்த நம்பர்லருந்து இப்போ கால் வந்தச்சு..... அதான் திருப்பி பன்னேன்.-நவீன்.

ஓ அப்டிங்களா .....இல்லங்க என்போன் டிஸ்பிளே போயிடுச்சு அதான் உங்க.. (லூசு ராங் நெம்பர்னு வேனுனே கட் பன்னுவான் அப்றம் மறுபடி நீயாதான் கால் பன்னனும் மரியாதையா பேசிடு) ஹே நவீன் தான.... -ரியா.

ஆமா என்ன உங்களுக்கு நியாபகம் இருக்கா....-நவீன்.

எப்டிப்பா.... மறக்ககூடிய ஆளா நீங்க இருக்கு உங்க நியாபகம்.....-ரியா.

ஹிம் பரவால.... ஹே நான் என் பிரண்ட் வீட்ல இருக்கேன் இப்போ அவன் சாப்பிட்டு பாதில எழுந்து வந்ததால முறைச்சுகிட்டு இருக்கான்... நா ஈவ்னிங் கால் பன்றேன்.-நவீன்.

ஈவ்னிங்கா.... கால் பன்னுவயா... நா டிஸ்பிளே- தெரியாம- அது.... ஓகே... என ரியா உளறினாள்... ஆனால் அவன் கால் செய்வதாக சொன்னதில் அவள் ஆனந்தத்தின் உச்சத்தில் இருந்தாள்.

ஹிம் ஓகே ஃபாய்.... என நவீன் பேசிமுடித்து திரும்பியவுடன் அருகில் அவன் நண்பன் ரகு நின்றான்.

என்ன மச்சி முகத்துல தவ்சண்ட் வாட்ஸ் பல்ப் எரியுது.... என்ன விஷயம்.... சாப்டுறத பாதில விட்டுட்டு இவ்ளோ நேரம் கடல போடுற.... யாரு உன் ஆளா???- ரகு.

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ