இருதயத்தில் எழும் கோபத்தீ

56 9 4
                                    


இறுகிய இருதயமதை பாறையென்றே ஊராரும் உரைக்க, இறுகிய இருதயமதில் எட்டிப் பார்த்தால், தென்படும் எண்ணற்ற காயங்களும், ஏமாற்றங்களும் அன்பே...!

ஏமாறுவது முட்டாள்தனமென்று அறிந்த அறிவாளியும், அன்பே உன்னால் மீண்டும் மீண்டும் ஏமாற்றங்களைச் சந்திக்கத் தயாராகவிடுகிறான் ஏற்பட்ட காயங்களையெல்லாம் பொருட்படுத்தாமல்....!

உறவென்று கூற யாருமில்லா அநாதையாய் இருந்தாலும் இருதயத்தினுள்ளே அன்பே உன் ஆதிக்கமென்பது இல்லாது போகுமோ அன்பே?...!

இருதயம் கொண்ட காதலே காணாமல் போகும் இக்காலம் போலித்தனமாக அன்பும் தலைவிரித்தாட காரியம் நடக்கும் வரை இருந்து, காரியம் முடிந்தும் இல்லாது போகுமென்பதை அறிய ஆயிரம் அனுபவங்கள் தினமும் காணலாம் நடைமுறை வாழ்வில்...!

பொருட்களாய் மனித உயிர்களைப் பயன்படுத்தி விருப்பு, வெறுப்பென்ற பெயரில் கண்டபடி வாழும் ஒழுக்கமில்லாத இருதயங்களில் உண்மையான அன்பு உள்ளதென்று கூறலாமோ அன்பே?....!

இளம் இருதயங்களில் நிரம்பிய விஷமங்களைக் கண்டு மனம் கலங்குகிறது அன்பே....!

தெரியாமல் எதுவும் செய்யலாமென்ற எண்ணம் கண்டு இந்த மனித சமுதாயத்தை அழிக்க மனமும் ஏங்குகிறது அன்பே...!

காலமே தீர்வு காணும்....!

மன்னிப்பு, வருத்தம்,  சோகம், துரோகம்Donde viven las historias. Descúbrelo ahora