உன் மனதைப் பிடிக்க வந்தேன்

15 4 0
                                    

திரும்பவும் திரும்பினாய் நான் திரும்பிய பொழுது,  

திருத்தமாய் முறைக்கிறாய் நான் விரும்பிய பொழுது

வருத்தங்கள் உண்டெனில் உடனே சொல்லிடு

பொருத்தமாய் பாசொல்லி அதை நான் அணைத்திட‌

கருத்துள்ள‌ பெண்ணே நீ எனைஎன்று புரிந்து கொள்வாய்?

மறுப்புகள் மறந்துவிட்டு எனைநன்று அறிந்து கொள்வாய்.

சின்னவிழி அசைவைப்பார்த்து எனக்கு பல‌ நாளாச்சு

சிணுங்கலுடன் சிரிப்பைப்பார்த்து பல பௌர்ணமி கடந்தாச்சு

விண்மீனாய் வெகுதூரத்தில் எனை விட்டு ஏனோ போயிருக்க‌

உன்மனதை பிடிக்கவந்தவன் எனை முழுதாய் தொலைத்திருக்கேன்

தடங்கலுக்கு நீ வருந்துவாய் என‌ தாகத்துடன் நான் பொருத்திருக்கேன். 

காதல் தண்ணீர் மட்டும் தருவாய் கண்ணீர் அணை திறக்க அனுமதியாய்....!  

மன்னிப்பு, வருத்தம்,  சோகம், துரோகம்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin