உண்மை நீ புரியும் பொழுது

29 6 2
                                    


பெண்ணே...! 

நான் உன்னை விரும்பிய பொழுதே நீ என்னை விரும்பாது இருந்திருந்தால் எனக்கின்று இவ்வளவு துன்பம் நேர்ந்திருக்காது..! 


ஐயகோ...!

என்னில் அன்று நீயாக வந்து புகுந்து கொண்டு 

எண்ணற்ற ஆசைகளை விதைத்து வளர்த்துவிட்டு 

உடனே இன்று உனை மறக்கச் சொல்கிறாயே

இது உனக்கே நியாயமா? 


எத்தனை ஆண்டுகள் என்னோடு சேர்ந்து நெருங்கி பழகி வந்தாய், 

அத்தனை ஆண்டுகளில், என்னை நீ புரிந்து கொண்டது 

இவ்வளவுதானா?

நேற்று பார்த்தவனை இன்று நீ மணந்து கொண்டது ஏன்? 

அது எப்படி அவனை மட்டும் ஒரே நாளில் புரிந்து கொண்டாய்? 

அவன் குணத்தையா? 

அவன் பதுக்கி வைத்திருக்கும் பணத்தையா? 

வாழ்க்கை என்பது வித்தைக்கு உதவும் ஒரு சக்கர வண்டியல்ல,

அதை வைத்துக் கொண்டு யாராலும்,

நெடுந்தூரம் பயணிக்க முடியாது,

அதை நீ புரிந்து கொள்வது எப்போது? 

அதை நீ அறியும் பொழுது 

நானும் இருக்கமாட்டேன் உன்னோடு,

புதைந்து கிடப்பேன் மண்ணோடு...!

மன்னிப்பு, வருத்தம்,  சோகம், துரோகம்Donde viven las historias. Descúbrelo ahora