Rank 1st love story (23/08/2019)
Rank 1st short story (25/11/2019)
Rank 1st fiction (19/10/2019)
Rank 1st marriage (12/2/2020
Rank 1st sentiment (10/12/2019)
Rank 2nd romance (10/12/2019)
Ranj 1st lovable (9/03/2021)
காதல் சில நேரங்களில் நாம்...
மூன்று நாட்களாக நிறைமதி க்கு (அவளுடைய உண்மையான பெயர் தெரியும் வரை நாமும் நிறைமதி என்றே அழைப்போம் ஃபிரண்ட்ஸ்!) எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை... தோழிகளிடம் அரட்டை அடிப்பது கூட குறைய ஆரம்பித்தது....
"ஏன்டி இப்படி இருக்க?" என்று தோழிகள் கேட்டும் அவள் பதில் சொல்லாமல் இருக்கவே,
இவள் நிலையை யூகித்து அவள் தோழிகள்... கோயிலுக்கு சென்று, 'மேகனின் தாத்தா வைப் பார்க்க வேண்டும்' என்று கூறி அவருடைய முகவரியைக் கேட்டனர். "அவர்கள் அனுமதி இல்லாமல் முகவரி தரமுடியாது ம்மா! இன்று மாலை அவர் கோயிலுக்கு வரும் போது பார்த்துக் கொள்ளுங்கள்... " என்று கூறினார் கோயில் அலுவலர்.
"எங்களுக்கு அவருடைய தொலைபேசி எண்ணையாவது கொடுங்கள் சார்... அனுமதி கேட்டு விட்டு நாங்கள் வருகிறோம்." என்று தோழிகள் கூறியதும், தொலைபேசி எண்ணைக் கொடுத்தார்.
தோழிகள் தனக்காக எவ்வளவு செய்திருக்கிறார்கள்? என்று நினைத்தவளுக்கு கண்ணீரே வந்தது. கண்கள் கலங்க, "ரொம்ப நன்றி பா!" என்றாள்.
சரி!சரி! போய் உன் ஆளுக்கு போன் பண்ணு. அவசரத்தில் அவன் தாத்தாவிடம் ப்ரபோஸ் பண்ணிடாதடி! ஆல் த பெஸ்ட்!" என்று கூறினர்.
காலேஜ் முடிந்ததும் தோழிகளுடன் சேர்ந்து, ஒரு பொது தொலைபேசியில் மேகன் வீட்டிற்கு ஃபோன் பண்ணினாள். ..ரிங் போய்க் கொண்டிருந்தது... நிறைமதி யின் மனதில், "தடக்! தடக்!" என்று ரயில் ஓடும் சப்தம் தோழிகளுக்கே கேட்டது. எதிர் முனையில் ரிசீவர் எடுத்து யாரோ " ஹலோ!" என்றதும் நிறைமதி ' டக்' என்று ஃபோனை கட் செய்து விட்டாள்.
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.