14

1.1K 51 10
                                    

கண்கள் கூட கவிதை பேசும்
உன் பார்வையில்
கவிதை கூட கண்ணீர் சிந்தும்
உன்னை பிரிவில்
வருவாயா சிம்டாங்காரா!
🌷🌷🌷🌷🌷🌷

"அடுத்து வரும் முகூர்த்த நாளில் சிவகாமி ங்கிற பெண்ணைப் பாக்கப் போகலாமா?" என்று புரோக்கர் கேட்டதும், குடும்பத்தினர், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"என்னங்கய்யா? ஏற்கனவே பார்த்த பெண், ரெண்டு பேருல ஒரு பெண்ணை புடிச்சுகிருச்சா?" என்று தாத்தாவைப் பார்த்து கேட்டார் கல்யாண புரோக்கர்.

"வீட்டுல கலந்து பேசிட்டு ஃபோன் பண்றேன்." என்று கூறி அனுப்பி வைத்தார் தாத்தா.

குடுத்தினர் அனைவரும், ஹாலில் இருந்தனர். மாடியில் இருந்து மேகன், சிபியுடன் வந்து அமர்ந்தான். புரோக்கர் வந்து போன விவரத்தை பிறைசூடன் கூறினார்.

"இதுவரை பார்த்த பெண்களில் யாரையும் உனக்கு பிடிச்சிருக்கா ப்பா? என்று மரகதம் கேட்டார்.

"நான் இன்னும் என் மனைவியைத் தேடும் மனநிலைக்கு வரல ஆச்சி. என்னால அவங்க ரெண்டு பேரையுமே எனக்கு வரப்போகும் மனைவியாக பாக்கமுடியல . . தயவுசெஞ்சு புரிஞ்சுக்குங்க..." என்றான் மேகன்.

பேச்சை மாற்ற நினைத்த சிபி, "அடுத்து பாக்க போற பொண்ணு பேரென்னப்பா?" என்று பிறைசூடனிடம் கேட்டான்.

அவன் பேச்சை மாற்றுவது புரிந்து, "அது.. எதோ. .. டக்குன்னு ஞாபகம் வரல.. காந்தி காலத்திலயே தடை பண்ணிய பேரு டா..." என்றார் சிரித்தபடி.

"ஏன் அந்த பேருக்கென்ன? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. நான் படிப்பு முடிஞ்சு வந்தவாசி க்கு சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிருந்தேன். அங்க எதிர் வீட்டுப் பொண்ணு பேரு சிவகாமி... பாக்க அப்படியே..." என்ற தாத்தா அருகில் "உஷ் ... உஷ்ஷ்ஷ்" என்று சப்தம் வரவும் திரும்பிப் பார்க்க, மேகன் குறும்பாக சிரித்தபடி இருந்தான். சிபி யும் பிறைசூடனும் கண்களால் சைகை செய்ய... "அவர்கள் என்ன சொல்கிறார்கள்?" என்று கேட்டவாறே மகளைப் பார்த்தார். ஷோபனா கண்களில் சிரிப்பு தெரிய... "என்ன? எல்லோரும் திருட்டு முழி முழிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க?" என்று கேட்டார்.

சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)Where stories live. Discover now