கலங்கி நின்றேன்
காதலுடன்....
காண வந்தாயே
சிம்டாங்காரா!🌹🌹🌹🌹
நிறைமதி, அவளுடைய அம்மாவின் குரல் கேட்டு சென்றதும் ,
"நான் சொன்னேன் ல இவன்தான்ப்பா. அன்று கடற்கரையில், இவன் பின்னால் தான் தங்கச்சி மறைந்து கொண்டாள்!" என்று தன் அப்பாவிடம் மேகனை அடையாளம் காட்டினான் மூத்த அண்ணன்.
"அப்போ ஏற்கனவே ரெண்டு பேருக்கும் பழக்கம் இருக்குன்னு சொல்றியாடா?" என்று கலங்கிப் போய் அப்பா கேட்டார்.
"ஆமாம் ப்பா! தம்பி ட்ட கூட கேட்டு பாருங்க. அம்மா சொன்னது சரி தான் ப்பா. நல்லா கவனிச்சுப் பார்த்திருந்தா, உங்களுக்கே சந்தேகம் வந்திருக்கும். இவ, கொஞ்ச நாளாவே திடீர்னு சிரிப்பா, திடீர்னு மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு திரிவா. இவங்களுக்குள்ள பழக்கம் இருக்குப்பா. .. இப்பக்கூட இவன், நம்ம குடும்ப விஷேசத்தில் கலந்துக்க வேணும்னு தான், கோயில் நிர்வாகி.... அது... இதுன்னு கதை பண்ணி நம்மை அவர்கள் வீட்டுக்கு போயி அழைப்பு வைக்க சொல்லியிருக்கா. எனக்கு அப்ப, இவ யாரு கூட பழகுறான்னு தெரியாது. தெரிஞ்சிருந்தா போகவேண்டாம் னு தடுத்திருப்பேன். நீங்க குடுக்குற செல்லம் தான் இவளுக்கு இவ்வளவு தைரியத்தைக் கொடுத்திருக்குப்பா..."
"என்னடா என்னென்னவோ சொல்ற? என்னால எதையும் நம்ப முடியவில்லையே..."
"என்னப்பா நீங்க! கண்ணால பார்த்தும் இப்படி சொல்றீங்க? எனக்கு மட்டும் நம் வீட்டு பெண்ணை தப்பா சொல்லனும் னு எண்ணமா?"
"அது இல்லடா! நம்ம தங்கச்சி சின்னப்பொண்ணு... அந்தப் பயபுள்ளைக்கு இவ்வளவு விவரமா பேசதெரியாது. இந்தப் பயதான் சின்னப்பிள்ள மனசை கலைச்சிருக்கான். இன்னொரு நாள் இவனை சந்தித்து மிரட்டி வை போதும். அப்புறம் அம்மாகிட்ட இங்க நடந்த எதையும் சொல்லாதே, பிள்ளையை போட்டு அடி பிச்சுடுவா. அதோட நின்னா பரவாயில்லை, சொந்தக்கார்களில் ஆரம்பித்து எல்லார்கிட்டேயும் புலம்பி, உன் தங்கச்சி வாழ்க்கையையே கெடுத்துடுவா. .. ஏன்டி இப்படி பண்ற ன்னு கேட்டா, இவ பண்ற அக்கிரமத்தை என் அண்ணன், தம்பி ட்ட சொல்லி அழக்கூட இந்த வீட்டில எனக்கு உரிமை இல்லையான்னு அதுக்கும் ஒரு பிரச்சனைய கிளப்பிவிட்டுடுவா. .. பெரியவன் நீ! பொறுப்பா இரு. ஆயிரம் இருந்தாலும் அவ உன் கூடப் பிறந்தவ. அவளை அசிங்கப் படுத்தி ட்டு நாம தெருவுல தலைநிமிர்ந்து நடக்க முடியாது. புரியுதா டா? இனி நாம என்ன செய்யனுமோ அத செய்வோம்." என்று கூறி விட்டு மகனையும் அழைத்துக் கொண்டு உறவினர்களை நோக்கி சென்றார்.
YOU ARE READING
சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)
RomanceRank 1st love story (23/08/2019) Rank 1st short story (25/11/2019) Rank 1st fiction (19/10/2019) Rank 1st marriage (12/2/2020 Rank 1st sentiment (10/12/2019) Rank 2nd romance (10/12/2019) Ranj 1st lovable (9/03/2021) காதல் சில நேரங்களில் நாம்...