என் பிடிவாதத்திடம் தோற்று
உன் அன்பிடம் ஜேயிக்கிறேன்...
வருவாயா சிம்டாங்காரா...
🌷🌷🌷🌷🌷🌷" உடம்புக்கு ஒன்னுமில்லை! வெறும் மனச்சோர்வு (depression) தான்." என்றார் குடும்ப மருத்துவர்.
" இத வர விடாம பண்ணுங்க டாக்டர். மேகனுக்கு கல்யாணம் பண்ணிவைக்கலாம்னு இருக்கோம்." என்றார் தாத்தா.
" மனச்சோர்வு ங்கறது வியாதி கிடையாது. மருந்து கொடுத்து சரி பண்ண... முதல்ல உங்க பேரன் ஒத்துழைக்கணும். .. அந்தப் பெண் தன் அஜாக்கிரதையால் தான் இறந்தாள் என்ற குற்ற உணர்வுல இருந்து வெளி வந்துட்டாலே சரியாயிடும்... ஆனா இவர் மேலும் மேலும் மனச புண்ணாக்கிக்கிறார்... இதற்கு கல்யாணம் ஒரு நல்ல தீர்வா? என்பது மணப்பெண்ணைப் பொறுத்த விசயம்... அதனால அவசரப்படாம இவர் மனச புரிஞ்சு நடக்கிற பொண்ணா பாருங்க..." என்று கூறி விட்டு, அடுத்த நோயாளியைக் கவனிக்கப் போய்விட்டார்.
" காலையில நல்லா தானம்மா
இருந்தான்..." என்று பிறைசூடன் வருந்தவும்,"கொஞ்ச நாளைக்கு இந்த பெண் பார்க்குற வேலையை நிறுத்தி வைப்போமா?" என்று தாத்தா அனைவரிடமும் கேட்டார்.
"நிறுத்த வேண்டாம். அவனைத் தயார் படுத்துவோம். பின்னே எப்ப கல்யாணம் பண்றது? அஞ்சு வருசமா மறக்காதவன், இப்பமட்டும் மறந்துடுவானா? அவனுக்கு சரியான பிறகுதான் பொண்ணு பார்க்கனும்னா... அலை எப்ப ஓயுறது கடல்ல எப்ப குளிக்கிறது ங்கற கதையாயிடும்." என்றார் மரகதம் ஆச்சி...
மரகதம் ஆச்சி சொன்னதும் சரியென்று பட்டதால், அனைவரும் அமைதியாக இருந்தனர்.
YOU ARE READING
சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)
RomanceRank 1st love story (23/08/2019) Rank 1st short story (25/11/2019) Rank 1st fiction (19/10/2019) Rank 1st marriage (12/2/2020 Rank 1st sentiment (10/12/2019) Rank 2nd romance (10/12/2019) Ranj 1st lovable (9/03/2021) காதல் சில நேரங்களில் நாம்...