21

1.3K 56 114
                                    

காண இயலா தூரம் சென்றவன்      
                                            -இன்று
கண்முன் நின்றும் தூரத்திலேயே நிற்பதேன் சிம்டாங்காரா

🌹🌹🌹🌹🌹🌹

மேகன் வீட்டில் நடக்கும் ஹோமத்திற்காக கிளம்பித் தயாராகி விசிட்டர்' ஸ் ஹாலில் ஹேண்ட்பேக்கை வைத்து விட்டு, வாசலுக்கும், விசிட்டர்'ஸ் ஹாலுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தாள் மிருத்திகா.

மிருத்திகா வின் செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஹாஸ்டல் வரவேற்பு பகுதியில் வேலை செய்யும் பெண்,

"என்ன மிருத்திகா அண்ணன் வீட்டுக்கா?" என்று கண்களை ஊடுருவி பார்த்தவாறு கேட்டாள்.

'என்னிடமிருந்து உனக்குத் தேவையான பதிலை பெறவே முடியாது' என்பது போல பார்த்துவிட்டு, வழக்கம்போல சிரிப்பை பதிலாக கொடுத்தாள் மிருத்திகா.

"அதானே பதில் சொல்லிட்டா வாயிருந்து முத்து உதுந்துடும்... புருஷன் வெளிநாட்டுல இருக்கான்... கொஞ்சமாவா சம்பளம் வாங்குவான்? வீட்டுல அடங்கி இருக்க முடியாம... வேலைக்கு போறேன்னு சொல்லிக் கிட்டு ஊர் சுத்துக. .. " என்று பொருமினாள் வரவேற்பு.

வரவேற்பு என்ன நினைப்பாள் என்று மிருத்திகா விற்கு நன்கு தெரியும். நான்கு வருடங்களுக்கு முன்னர் இதற்கெல்லாம் அழுதவள். .. இவள் அழுதவரை குத்தி குத்தி பேசியவர்கள், அழுகையை நிறுத்தவும் வேறுவிதமாக பேசினார்கள்... பேச்சைக் குறைத்து இறுக இறுக எதிரில் இருந்தவர்கள் பயந்தார்கள்... பின் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருக்கவே... இவள ஒன்னும் பண்ண முடியலயே ன்னு அவர்களுக்கு அவர்களே குத்திக் கொண்டனர்... இவளுக்கும் சுடு சொற்கள் பழகிவிட்டது.

தூரத்தில் செண்பகம் வருவது தெரியவும், தன் பேக் கை எடுத்துக் கொண்டு ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தாள்.

தனியே மேகன் வீட்டிற்கு செல்ல ஏதோ போல இருந்தது... அண்ணியை துணையாக அழைத்துச் செல்ல விரும்பவில்லை... ஐந்து வருடங்களுக்கு முன்பு அண்ணி செய்த உதவியால் இன்றும் தன் தாயிடமும் உறவினர்களிடமும் திட்டு வாங்குகிறார்கள். இத்தனைக்கும், "அண்ணிக்கு விஷயமே தெரியாது. கோயிலுக்கு சென்றபோது, "இயற்கையின் அழைப்பு" என்று நான் தான் பொய் கூறிவிட்டு சென்று விட்டேன்" என்று எத்தனை யோ முறை எத்தனையோ விதமாக கூறியும் அவர்களிடம், அண்ணி திட்டு வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)Where stories live. Discover now