27

996 52 100
                                    

காலை உணவு வேளையின் பொழுது முதல் நாள் நடந்த அனைத்தையும் தன் குடும்பத்தினரிடம் கூறினான் மேகன்.

ஒருத்தர் கூட மிருத்திகா, குடும்பத்தாராலேயே கஷ்டங்களை அனுபவித்திருப்பாள் என்று நினைக்கவில்லை.

"என்னடா அவ அம்மா இப்படி இருக்காங்க? நிஜமாகவே மிருத்திகா வைப் பெற்ற தாய் தானடா? தத்து பிள்ளையா? ஒரு அம்மா எப்படி டா இப்படி இருப்பாங்க? எல்லா வீடுகளிலும் அப்பா திட்டுவாரேன்னு, தடுக்கிறவங்க தானே அம்மா?" என்று ஒருவர் மாற்றி ஒருவர் புலம்பி விட்டனர்.

"இனியும் அந்தப் பெண் அவங்களோட பொண்ணா இருக்க வேண்டாம்யா... ஒரு நல்ல நாளா பாத்து, நிச்சயம் பண்ணி, கல்யாணத்தயும் முடிச்சுடுவோம்யா." என்றார் தாத்தா.

எல்லோரும் அதை ஆமோதித்தனர்... உடனே குடும்ப ஜோசியருக்கு ஃபோன் பண்ணி, வரச்சொன்னார் தாத்தா.

குடும்ப ஜோசியர் வந்து மேகனின் ஜாதகத்தைப் பார்த்து,

"இவருடைய திருமணம் பல தடைகளைத் தாண்டி நடக்கும் என்பது தான் உண்மை... அதில் பெரிய கண்டத்தை தாண்டியாச்சு. பல தடைகளையும் மீறி பெண்ணை சந்திச்சாச்சு. இன்னும் ஒரு தடை இருக்கிறது. அதை தாண்டிவிட்டால் போதும்.. இனி கவனமாக இருங்க. " என்று கூறி பரிகாரம் என்று சில பூஜைகளை செய்ய சொல்லிவிட்டு போய்விட்டார்.

மிருத்திகா அண்ணன் கதிர்க்கு  ஃபோன் பண்ணினான் மேகன். கதிர் போனை எடுத்தான். அவனிடமிருந்து, மிருத்திகா ஃபோன் நம்பரை வாங்கி ஃபோன் செய்தான். மூன்று முறை அடித்தும் மிருத்திகா ஃபோன் எடுக்காமல் இருக்கவே மீண்டும் கதிருக்கு ஃபோன் செய்து, மிருத்திகா ஃபோன் எடுக்காதது பற்றி  கூறினான்.

"நான் நேரில் போய் பார்த்து விட்டு ஃபோன் பண்றேன்" என்று கூறி கதிர் ஃபோனை வைத்து விட்டான்.

மேகனுக்கு இருப்பு கொள்ளவில்லை. தன் பைக்கை எடுத்துக் கொண்டு மிருத்திகா வீட்டுக்கு விரைந்தான். வீட்டிற்குசென்று அழைப்பு மணியை அழுத்தினான். யாரும் வந்து திறக்கவில்லை. பயந்து போய் மீண்டும் ஃபோன் க்கு முயற்சி செய்தான். இரண்டு ரிங் போவதற்குள், கதவு திறந்தது. மேகன் வேகமாக உள்ளே வர அவள் அப்பொழுது தான் குளித்திருப்பாள் போல தலைமுடியை துவட்டி படி முன்னே நடக்க, மேகன் அவளை பாய்ந்து சென்று இழுத்து கட்டிப்பிடித்தவன், எதிரில் அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தாள் மிருத்திகா.  'அப்போ யாரை அணைத்திருக்கிறேன்' என்று நினைப்பதற்குள், அவனைப் பிடித்து எட்ட நிற்க வைத்த தீபா,

சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)Where stories live. Discover now