மௌன கவிதை நீ
ரசிக்கும் ரசிகை நான்....🌹🌹🌹🌹
சன்னமாக விசில் அடித்தபடியே வந்த பேரனை பார்த்த தாத்தா, குஷி மூடில்தான் இருக்கிறான். என்று நினைத்தவர்,
" மேகா! கொஞ்சம் இப்படி வாயா." என்று அழைத்ததும்தான், தான் இன்னும் முடிவு சொல்லவில்லை என்பது நினைவில் வந்தது. தாத்தாவின் அருகில் தரையில் அமர்ந்தவன்,
"நான் ஆஸ்திரேலியா போகல தாத்தா. உங்க கூட தான் இருக்கப் போறேன்... அம்மாகிட்ட நீங்களே சொல்லிடுங்க தாத்தா ப்ளீஸ்!" என்றவனை ஆச்சரியத்துடன் பார்த்தார். எப்போதடா படிப்பு முடியும் அம்மாவிடம் ஓடிவிடலாம் என்று இருந்தவன். ஒரு வருடமாகத்தான்,
"நீங்க ரெண்டு பேரு மட்டும் ஏன் தனியா இருக்கீங்க. எங்களோட வந்துடுங்களேன்." என்று அடிக்கடி கூறினான். இப்பொழுது படிப்பு முடிந்தும் மேகன் ஆஸ்திரேலியா செல்லாமல் இங்கேயே வேலை தேடிக் கொண்டான். இதை எதிர்பாராத அவனது பெற்றோர், அதாவது அவனுடைய தாத்தாவுடைய மகளும் மருமகனும்,
" நீ என்ன செய்கிறாய்? ஆஸ்திரேலியாவுக்கு வர்றியா? அல்லது இந்தியாவிலேயே இருக்கப் போகிறாயா? நீ எங்கே செட்டில் ஆகப்போகிறாய் என முடிவாக கூறினால், அங்கே நீ தொழில் தொடங்க தேவையான அனைத்தும் செய்து தருகிறேன். நல்லா யோசித்து முடிவெடு. ஏன்னா? நீ எங்க செட்டில் ஆகிறாயோ. அங்கேயே நாங்களும் இருக்கப் போகிறோம். அதனால ஒரு வாரம் அல்லது தேவையான நாள் எடுத்துக்க... ஆனா தீர்க்கமான முடிவெடு. என்று கூறியதிலிருந்து, மேகன் குழப்பமான மனநிவையிலேயே, சிரிக்கக்கூட மறந்து திரிந்தான். கடைசியில் அவன் ஆசையான ஆஸ்திரேலியா செல்வதை விட, எங்கள் மேல் உள்ள பாசம் ஜெயித்துவிட்டது. அதனால் தான் "இங்கேயே இருந்து விடுகிறேன்" என்கிறான்.' என்று நினைத்தவர், மேகனின் பாசத்தில் கரைந்தார். அவருக்கு என்ன தெரியும்? மேகன் இந்தியாவிலேயே செட்டில் ஆவதற்கு, அவர்மேல் உள்ள பாசம் மட்டும் காரணமல்ல என்று.... சிவகாம சுந்தரி யை பார்க்கும் வரை குழப்பிக் கொண்டு இருந்தவன், அவளை பார்த்தவுடன் முடிவெடுத்து விட்டான் என்று....
![](https://img.wattpad.com/cover/195242372-288-k86718.jpg)
YOU ARE READING
சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)
RomanceRank 1st love story (23/08/2019) Rank 1st short story (25/11/2019) Rank 1st fiction (19/10/2019) Rank 1st marriage (12/2/2020 Rank 1st sentiment (10/12/2019) Rank 2nd romance (10/12/2019) Ranj 1st lovable (9/03/2021) காதல் சில நேரங்களில் நாம்...