Rank 1st love story (23/08/2019)
Rank 1st short story (25/11/2019)
Rank 1st fiction (19/10/2019)
Rank 1st marriage (12/2/2020
Rank 1st sentiment (10/12/2019)
Rank 2nd romance (10/12/2019)
Ranj 1st lovable (9/03/2021)
காதல் சில நேரங்களில் நாம்...
தேடாமலே கிடைத்தவள் தேடி வந்தவனை தேடவிட்டுச் சென்றதெங்கே?
மிருத்திகா எங்கே என்று தெரியாமல் மேகன் உட்பட அனைவரும் கலங்கி இருந்தனர்... அனைவருக்குமே பாலசௌந்தரியின் மேல்தான் சந்தேகம் இருந்தது...
மேகனும் சிபியும் விக்னேஷை அழைத்துக் கொண்டு அழகுசுந்தரம் வீட்டிற்கு மிருத்திகாவைத் தேடி சென்றனர்.
மிருத்திகாவின் அப்பா, செண்பகத்தை அழைத்துக் கொண்டு ஈஸ்வரி வீட்டிற்கு சென்றார்...
கதிரும், நித்யாவும் உள்ளூரில் மிருத்திகா செல்லும் இடங்களுக்கு செல்வதாக கூறினர். மற்றவர்கள் மிருத்திகா வை த் தேடி சென்ற பிறகு, கதிர் தன்னுடைய அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தான்...
"அம்மா ப்ளீஸ்! மீரா எங்கே இருக்கான்னு தெரிஞ்சா, இப்பவாவது சொல்லிடுங்க... நான் பார்த்து கூட்டிட்டு வந்தேன்னு சொல்லிக்கிறேன்." என்று கதிர் கெஞ்சினான்.
"எனக்கு உண்மையிலேயே தெரியாது டா. .. நானே பயந்து போய் தான் இருக்கேன்."