தேடித் தேடி தேடும் மனசு
தொலைகிறதே....
- துள்ளாத மனமும் துள்ளும் .மிருத்திகா, அழகு வீட்டிலும், ஈஸ்வரி வீட்டிலும் இல்லை என்று தெரிந்ததும் மேகனுக்கு, என்ன செய்வது? எங்கே போய்த்தேடுவதென்று தெரியவில்லை. 'வேற வழியில்லை மாமியாரிடம் விசாரிக்க வேண்டியதுதான்,' என்று நினைத்து, விக்னேஷிடம்,
"விக்னேஷ் நீங்க உங்க அம்மா கிட்ட கொஞ்சம் விசாரிங்க... எனக்கென்னவோ உங்கம்மாவுக்கு மிருத்திகா எங்கே இருக்கான்னு தெரியும்னு தோணுது." என்றான்.
"எனக்கும் அப்படித் தான் தோணுது... கதிர் நம்மை அனுப்பி வச்சுட்டு எங்கம்மா கிட்ட விசாரிக்கிறான்னு நினைக்கிறேன். முதல்ல அவனுக்கு ஃபோன் பண்ணி பாக்கறேன்." என்று கூறியவாறு மொபைல் ஃபோனை விக்னேஷ் எடுக்கும்போதே அவனுடைய ஃபோன் ரிங் ஆனது. யார் என்று பார்த்தான். 'கதிர்!!"
"கதிர். .." என்று விக்னேஷ் ஆரம்பிக்கவுமே,
"அண்ணா! அம்மா மயக்கம் போட்டுட்டாங்க. .. என்ன செஞ்சும் மயக்கம் தெளியாததால பக்கத்துல இருக்கும் ஆஸ்பத்திரில சேர்த்திருக்கேன். ட்ரீட்மெண்ட் பண்ணிக்கிட்டிருக்காங்க சீக்கிரம் வாண்ணா!" என்று அழுதபடி கூறினான் கதிர்.
விஷயத்தை மேகனிடமும் சிபி யிடமும் கூறி, காரில் ஏறினர்.
முவருமே ஆஸ்பத்திரிக்குள் நுழையவும் தீபா எதிரில் வந்தாள்.
"என்னங்க... அத்தைக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக்காம். ஐசியூ வில் சிகிச்சை நடக்கிறது. மீரா எங்கே இருக்கான்னு தெரிஞ்சதா?" என்று விக்னேஷிடம் கேட்ட தீபா மேகனைப் பார்த்து முறைக்கலாமா வேண்டாமா என்று தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள்.
அப்பொழுது அங்கு வந்த நித்யாவும் கதிரும் மேகனிடம்,
YOU ARE READING
சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)
RomanceRank 1st love story (23/08/2019) Rank 1st short story (25/11/2019) Rank 1st fiction (19/10/2019) Rank 1st marriage (12/2/2020 Rank 1st sentiment (10/12/2019) Rank 2nd romance (10/12/2019) Ranj 1st lovable (9/03/2021) காதல் சில நேரங்களில் நாம்...