19

1.4K 51 105
                                    

தினமும் பார்த்தபோது
சொல்லாத வார்த்தைகளே
தினமும் நினைக்கும்போது
வதைக்கிறதே சிம்டாங்காரா...
🌷🌷🌷🌷🌷🌷

மிருத்திகா வை அவள் தங்கியிருந்த ஹாஸ்டலில் விட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் மரகதம் ஆச்சியும், ஷோபனா வும்.

வீட்டில் தாத்தா, அப்பா, மேகன், சிபி நால்வரும் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தனர். வீட்டினுள் வந்ததும் மேகன் தான், ஓடிவந்து கேட்கப் போகிறான் என்று ஆச்சியும் அம்மாவும் நினைக்க, ஓடி வந்தது தாத்தாவும், அப்பாவும்.

யோசனையுடன் மேகனைப் பார்த்த ஷோபனா,

"என்னடா? நாங்க இவ்வளவு தூரம் போயிட்டு வந்திருக்கோம், நீ அமைதியா உக்காந்து பார்த்துக்கிட்டு இருக்க?!!!" என்று கேட்டார்.

"அங்க என்ன நடந்திருக்கும்ன்னு தெரியும்.. பிறகு எப்படி நம்புவேன்?"

மேகனைப் பார்த்த அனைவருக்கும் மனதை பிசைந்தது... மரகதத்தை த் தவிர,

"நீ புத்திசாலின்னு நினைச்சேன் டா..."
என்றார் மரகதம் ஆச்சி.

"இப்ப என்னோட புத்திசாலிதனத்துக்கு என்ன ஆச்சு? "

"நான் ஒரு கதை சொல்லவா? காலை ல ஹலோ எஃப்எம் ல, ஆர்.ஜெ. ஜெயராம் சொன்ன கதை...
ஒருத்தன் தன்னோட வீட்டுல மீன் தொட்டிவச்சு மீன் வளர்த்தானாம்... அந்த தொட்டியில் இருந்த ஒரு மீன், கூட வளரும் மீன்களை எல்லாம் சாப்பிட்டு விடுமாம்... அந்த மீனோ ரொம்ப ராசியான மீன். அதுனால அந்த மீனையும் தூக்கிப் போட முடியல, வேற மீன்களும் வளர்க்க முடியல. அடுத்த நாள், ஒரு கண்ணாடி தடுப்பு வாங்கி வந்து மீன் தொட்டியின் நடுவில் பொருத்தினான். ஒரு பக்கம் ராசி மீன், மறுபக்கம் மற்ற மீன்களை வைத்து வளர்த்தான். .. ராசி மீன், மற்ற மீன்களை சாப்பிட ஓடி வந்து கண்ணாடித் தடுப்பில் மோதிக்
கொண்டதாம். தினமும் இதே நடந்திருக்கிறது... ராசி மீனுக்கு, 'தன்னால் அந்த மீன்களை நெருங்க முடியாது. அப்படி நெருங்கினால் நமக்குத் தான் அடிபடும்.' என்று நினைத்து, மற்ற மீன்களின் அருகில் செல்வதையே நிறுத்திவிட்டது... இதை கவனித்த மீன் வளர்ப்பவன், அடுத்த நாள் அந்த கண்ணாடி தடுப்பை எடுத்து விட்டானாம்... ஆனால் அதன் பிறகும் ராசி மீன் மற்ற மீன்களை சாப்பிடவே இல்லையாம்... ஏன் சொல்லுங்க ?" என்று பொதுவாக கேட்டார் மரகதம் ஆச்சி.

சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)Where stories live. Discover now