11.

1.8K 54 24
                                    

   நீதானே நான் தேடும்
   பிருந்தாவனம்...
       🌷🌷🌷🌷🌷🌷

தொடர்ந்து ஒரு வருடம் அதே கனவு வந்தால், "உனக்காக அந்தப் பெரியவர் சொன்னபடி நடக்கிறேன்" என்று  சிபியிடம் கூறிய மேகனால் அவன் சொன்னபடி செய்வது இயலாததாகியது.

  ஏனென்றால் அதே கனவு அடிக்கடி வந்தது... ஆனால், பெயர் கூட உண்மையானது இல்லை... அவளும் இல்லை... பிறகு எதற்கு தேவையில்லாமல் பெண் பார்க்க போகனும்? நான் அவளுடைய  பெயரையா விரும்பினேன்? என்று நினைத்து, அந்தப் பெரியவர் சொன்னதைச் செய்யாமல் தவிர்த்தான்.

யாரோ கூறினார்கள் என்று யோகா வகுப்புக்குச் சென்று மூச்சுப்பயிற்சியும், தியானமும் கற்று வந்து, தினமு‌ம் கற்றபடி செய்தும் வருகிறான். ஆனால் கனவை மட்டும் நிறுத்தவே முடியவில்லை. இப்படியே இரண்டு வருடங்கள் ஓடியது....

ஒரு நாள் அதிகாலை....
.....இளம்காலைப் பொழுது மிக அழகாக விடிய.... ஜில்லென்று குளிர் மேகனைத் தாக்கியது.... அந்த இனிமையான சூழலை கண்மூடி ரசிக்கும் பொழுது.... முதுகில் கதகதப்பான உணர்ந்து, மேகன் கண்களைத் திறந்து பார்க்கும் பொழுது, அவள், மேகனை பின்புறமாக அணைத்து அவன் முதுகில் தலை சாய்த்துக் கொண்டாள்.

 முதுகில் கதகதப்பான உணர்ந்து, மேகன் கண்களைத் திறந்து பார்க்கும் பொழுது, அவள், மேகனை பின்புறமாக அணைத்து அவன் முதுகில் தலை சாய்த்துக் கொண்டாள்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அவளிடமிருந்து கஸ்தூரி மஞ்சள் வாசமும், மல்லிகைப் பூவின்  வாசமும் கலந்து வந்து அந்த சூழ்நிலையை மேலும் இனிமையாக்கியது. .. அவள் கைகளைப் பற்றி, தன் முன்னால் கொண்டு வந்தவன், அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். அவள் சிணுங்கி ஓட, அவள் கையைப் பிடித்து மேகன் இழுக்கவும் அவன் மேலேயே வந்து விழுந்தவள், எத்தனை காலம் தான் இப்படியே கழிப்பது? எப்ப வந்து என்னை பெண் கேட்பீர்கள்?" என்று கேட்டவள் நிறைமதி யாக மாற, சட்டென்று கண்விழித்தான். ... வழக்கமான கனவுதான் ஆனால் முதன்முறையாக பேசிவிட்டாள்...  உடலெங்கும் வியர்வை அருவியாகஓடி இரவு உடையை நனைத்தது. ... 'இன்றைக்கு என்ன? இவ்வளவு தீவிரமான கனவு?'  என்று எழுந்து அமர்ந்தவன் அருகில் இருந்த தண்ணீர் ஜாடியிலிருந்து தண்ணீரைக் குடித்தும் பதட்டம் குறையவில்லை... படுக்கையில் இருந்து எழுந்து அருகில் இருந்த சோபா வில் அமர்ந்தான்... அப்பொழுதும் வியர்வை நிற்கவில்லை... ஏசி யை அணைத்து விட்டு ஜன்னல் கதவுகளைத்திறந்தான்.... மனம் இன்னும் சமநிலை அடையாததால், தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்து மீண்டும் சோபாவில்  அமர்ந்தான்....
(படம் : உனக்காகவே வாழ்கிறேன்  )

சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)Where stories live. Discover now