20.

1.2K 52 50
                                    

நிறைவேறாத காதலும்
நினைவலைகளில்
கல்யாணத்தில் முடிகிறதே சிம்டாங்காரா...
🌷🌷🌷🌷🌷🌷

இரவு முழுவதும் மேகனுக்கு தூக்கம் வரவில்லை.. மிருத்திகா வருவதற்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறதே? இந்த ஆச்சி நாளைக்கே ஹோமம் என்று கூறி விட்டு வந்திருக்கக் கூடாதா! என்று நினைத்தவன், ச்சே என்ன நான் இப்படி நினைக்கிறேன்... ஆச்சி மட்டும் மிருத்திகா வை சந்திக்கப் போகாமலிருந்தால், இந்நேரம் ஆஸ்திரேலியா போக ஆயத்தமாகி இருப்பேன். மிருத்திகா பற்றி தெரியாமலே போயிருக்கும்..

மணியைப் பார்த்தான்... ரெண்டு மணி இருபத்து ஐந்து நிமிடம் ஆகியிருந்தது... கண்களில் ஒரு பொட்டு தூக்கமில்லை. .. எழுந்து பால்கனியில் இருந்த மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்து, இருட்டிலும் ஒரு ஆனந்தம் தெரிவதை சிறிது நேரம் ரசித்து விட்டு மீண்டும் தன் அறைக்குள் வந்தவனுக்கு மிருத்திகா வைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. மொபைல் ஃபோனை எடுத்து, சிபி நம்பருக்கு டயல் செய்து கட் பண்ணி விட்டான். பிறகு மீண்டும் சிபி நம்பருக்கு டயல் செய்தான்... மறுமுனையில்,

"ஹஅஅலோஓஓ" என்றான் தூக்கத்தோடு சிபி.

"சிபி! தூங்கிட்டருக்கியா?" என்று அறிவுத்துவமான கேள்வியைக் கேட்டான்.

தூக்கம் கலைந்த சிபி, ஃபோன் மானிட்டரை பார்த்தான். மேகன் நம்பர் ஒளிர, ஆச்சர்யத்துடன் மணியைப் பார்த்தான் மூன்று மணியாகி ஐந்து நிமிடம் ஆகியிருந்தது...இவன் இந்த நேரத்தில ஃபோன் பண்ணறவனில்லையே... என்று பதறி எழுந்தவன்,

"சொல்லுடா.." என்றான்

"தூக்கமே வரமாட்டேங்குது சிபி!"

"அடப்பாவி இத சொல்றதுக்காடா தூங்கிக்கிட்டிருந்தவனை எழுப்பின?"

"தூங்கிட்டிருந்தியா ஸாரிடா"

"உன் ஸாரி யைக் கொண்டு போயி உடப்பில் போடு! நீ இப்ப என்ன பண்ணிக்கிட்டிருக்க?"

"உனக்கு ஃபோன் பண்ணி பேசிக்கிட்டிருக்கேன்.

"நீயா டா இது? உன்னை பார்த்தா ஆஸ்திரேலியாவின் பிரபல ஏற்றுமதி நிறுவனத்தை நடத்துறவன் மாதிரியா இருக்கு? "

சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)Where stories live. Discover now