இப்பொழுதே மேகனின் வீடு கல்யாண களை கட்டியது போலிருந்தது.
மிருத்திகா வீட்டினர் அனைவரும் மேகன் வீட்டிற்கு வந்திருந்தனர். மிருத்திகாவை, செண்பகத்துடன். விக்னேஷ் வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்ததால் மேகன்தான் முகத்தை தொங்கப்போட்டு அலைந்தான். நைசாக நழுவலாம்னு பார்த்தா..., பாலசௌந்தரி, மேகனை கவனிச்சுக்கிட்டே இருந்தார்."என்னடா நழுவ முடியல.." என்று மேகன், சிபியிடம் புலம்ப,
"போனதடவ, போயும்,போயும் அந்த அம்மா கண்ணுல மாட்டிட்ட. .. அதை மறக்க முடியுமா? அதான் உன்னையே விடாம சைட் அடிச்சுக்கிட்டு இருக்கு..."
"சைட் டா"
"என்ன செய்றது இன்னைக்கு உன் தலையெழுத்து, நாற்பதுகளில் இருக்கும் பொம்பளை சைட் அடிக்குது..."
"டேய்! ஏதாவது உதவி செய்வேன்னு பார்த்தா கடுப்பேத்திக்கிட்டு இருக்க?" என்று கூறியவன், பால சௌந்தரி, பெரியவர்கள் பேச்சில், கவனமாயிருந்ததைப் பார்த்து, மெல்ல நகர,
"தம்பியையும் கூப்பிட்டு பேசுவோம்... அவருக்கும் நாம என்ன பேசுறோம்னு தெரிஞ்சிருக்கனும்ல? நாளபின்ன, எங்க பொண்ணுகிட்ட, பெரியவங்க பேசினது, எனக்கெதுவும் தெரியாதுன்னு சொல்லிக் கூடாதுல்ல..." என்று கூறி பாலசௌந்தரி, மேகனையும் அவன் குடும்பத்தினருக்கு அருகில் அமரவைத்து விட்டார்.
சும்மா இருந்திருந்தாலும் அவன்பாட்டுக்கு இருந்திருப்பான். பாலசௌந்தரி செய்தது மேகனை சீண்ட, 'இந்த அத்தையை கொஞ்சம் அலற விடலாமா?' என்று யோசித்த நேரத்தில், அவன் மொபைல் ரிங் ஆனது...
YOU ARE READING
சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)
RomanceRank 1st love story (23/08/2019) Rank 1st short story (25/11/2019) Rank 1st fiction (19/10/2019) Rank 1st marriage (12/2/2020 Rank 1st sentiment (10/12/2019) Rank 2nd romance (10/12/2019) Ranj 1st lovable (9/03/2021) காதல் சில நேரங்களில் நாம்...