26

985 51 72
                                    

  மேகங்களுடன் சரசமாடும்
      பால்நிலவே...
மேகனுக்கு தூது செல்ல
       பாஷை யற்றுபோனாயோ?

   🌷🌷🌷🌷🌷🌷
   மிருத்திகா ஹாஸ்டலுக்கு  வந்து சேர்ந்தது வரை சொன்ன கதிர், கண்களில் கண்ணீர் முட்ட திரும்பி நின்றான். அப்பொழுது அருகில் உள்ள மரத்தடியில் நின்றவாறு யாரோ தாங்கள் பேசுவதை கேட்கின்றனர் என்று உணர்ந்து, மிருத்திகா, செண்பகம், விக்னேஷ் ஆகியோரிடம் சொல்ல, மற்ற மூவரும் திரும்பி பார்த்ததும் மரத்தடியில் நின்றவர்கள், இவர்களை நோக்கி வர, நால்வரும் சற்று கூர்ந்து கவனித்தனர்.

   இருட்டான மரத்தடியை விட்டு அவர்கள் வெளிவர நிலவின் ஒளி, மேகன், சிபி இருவரையும் நன்றாக அடையாளம் காட்டியது.

"இவர்கள்தான் வீட்டிற்கு சென்றார்களே! எப்பொழுது இங்கு வந்தனர்?" என்று நால்வரும் யோசிக்கும் பொழுதே மேகனும், சிபியும் வந்து விட்டனர்.

"இங்க என்ன பண்றீங்க?" என்று விக்னேஷும், கதிரும்,

"வீட்டுக்குப் போகலையா?" என்று மிருத்திகா வும்,

"எப்ப வந்தீங்க?" என்று செண்பகமும் ஓரே நேரத்தில் கேட்டனர்.

    "ஆச்சி கொடுத்து விட்ட புடவை பைகளை காரிலேயே விட்டுட்டு வந்துட்டீங்க. அத கொடுக்க த்தான் வந்தோம். நீ ஆக்ஸிடெண்ட் நடந்ததற்குப் பிறகு, நீங்கள்  தென்னாங்கூர் போனதை பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்துட்டோம். ..அடுத்து நீ சொன்ன விஷயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியில் நின்றுவிட்டோம். . அடுத்தடுத்து உனக்கு நடந்த கொடுமைகள் எங்களை, அங்கேயே நிற்பதா? இல்லை உங்கள் அருகில் வருவதா ன்னு தெரியாதஅளவு  மரத்துப் போகச் செய்தது. வெளி உலகம் தான் உன்னை காயப் படுத்தி இருக்கும் னு நெனச்சோம். ...  நீங்கள் திரும்பி பார்க்கவும் தான் எங்களுக்கு உணர்வு வந்து உங்களிடம் வந்தோம்". என்று சிபி கூறிக்கொண்டிருந்தான்.

ஆனால் மேகன் இன்னும் மனதளவில் மிகவும் நொருங்கிப் போயிருந்தான். அவன் கண்கள் இரண்டும் கோவைப் பழங்களாக சிவந்திருந்தன. அதனால் கண்களில் திரண்டிருந்த கண்ணீர், ரத்தம் போன்று சிவப்பாக தெரிந்தது. பற்களைக் கடித்தபடி, கைவிரல்களை இருக்கி மூடியிருந்தான்... முகம் ரெத்த ஓட்டத்தை நிறுத்தி வெளிறியிருந்தது...
நெற்றி பொட்டில் நரம்புகள் புடைத்து தெரிய, அவன் நிலையை பார்த்த மிருத்திகாவின் கண்கள் விரிய, அவள் பார்வை யைத் தொடர்ந்து, மேகனைப் பார்த்த சிபி, அரண்டுவிட்டான்.
'இவனை கவனிக்காம போயிட்டேனே! இப்படியே விட்டால் தலைவலி வந்துடுமே!'என்று பயந்த சிபி,

சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)Where stories live. Discover now