மேகனும், மிருத்திகாவும் வீட்டில் இருந்த பொழுது, திறந்து வைத்திருந்த வாசல் கதவை, யாரோ தட்டுவது போல தோன்ற, வேகமாக வெளியே எட்டிப் பார்த்த மிருத்திகா பயத்தில் பின்வாங்கி, மேகனின் பின்னால் மறைந்து கொண்டாள்.
"யார் ரித்தி? கதவு திறந்து தானே இருந்தது?" என்று மேகன் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே, உள்ளே வந்த பால சௌந்தரி,
(மிருத்திகாவின் அம்மா!)"நினைச்சேன்... இப்படி தான் நடக்கும் னு.... வீட்ல பெரியவங்க இருந்தா கண்டிப்பாங்க...இப்படி கண்டவனோட திரிய முடியாதுன்னு தானே, பெரிய இவ மாதிரி பெரியவங்களோட சண்டை போட்டுட்டு தனியா வந்த? வந்ததே இதுக்குதானே? நீயல்லாம் ஒரு பொண்ணு! த்தூ!! கொஞ்சமாவாது கூச்ச நாச்சம் வேண்டாம்... அடுத்த ஆம்பளையோட உன்னை இங்க விட்டுட்டு, இந்த வீட்டு சிறுக்கி என்ன பண்றா? ஆடியேய்! இதுக்குதான் இங்க கூட்டிவந்தியா?" என்று மேலும் அந்த இடத்தில் ஒரு ஆண் இருக்கிறான் என்ற எண்ணமில்லாமல் காது கூசும் படியான வார்த்தைகளில் திட்டியபடி அடுப்படி வரை சென்ற பாலா சௌந்தரி, வீட்டில் யாருமில்லாததைக் கண்டு, மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டியபடி மிருத்திகாவை ஆங்காரத்துடன் நெருங்கி, மிருத்திகாவின் தலைமுடியை பிடிக்க எட்டும் நேரத்தில், பால சௌந்தரி கையைப்பற்றிய மேகன்,
"ஏய் ! யார்நீ? இங்க வந்து என்ன பண்ற?" என்று அதட்ட,
'அவர்கள் வீட்டு ஆண்களைப்போல் வேடிக்கை பார்ப்பான்... அல்லது மிருத்திகாவின் அண்ணன்கள் போல கெஞ்சி சத்தம் போடுவான். .. நாம மேற்கொண்டு சப்தம் போட்டு, ஊரைக்கூட்டி அசிங்கப்படுத்தி துரத்தி விடலாம்' என்று எண்ணிய பாலசௌந்தரிக்கு, மேகன் அவள் கையைப் பற்றியதே, மணிக்கட்டு எரிய, பேசிய வார்த்தைகளையும் சப்தமில்லாமல் மென்று துப்பியதை எதிர்பார்க்கவில்லை... மேகனிடமிருந்து கைகளை விடுவிக்கவே முடியாத கோபத்தில் அவள் கத்த தொடங்க, மேகனின் பின்னால் நின்ற மிருத்திகா,
YOU ARE READING
சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)
RomanceRank 1st love story (23/08/2019) Rank 1st short story (25/11/2019) Rank 1st fiction (19/10/2019) Rank 1st marriage (12/2/2020 Rank 1st sentiment (10/12/2019) Rank 2nd romance (10/12/2019) Ranj 1st lovable (9/03/2021) காதல் சில நேரங்களில் நாம்...