கொலை என்று சாதாரணமாக அவன் சொன்னதும் திடுக்கிட்டாள் ரேணு.
"என்ன விளையாடறயா??"
"இல்ல, அந்த கார்ப்ஸை பாத்தா, ஆக்ஸிடெண்ட்ல செத்துப்போன மாதிரித் தெரில எனக்கு.."
அவள் திகைப்பை விடுத்து சலித்துக்கொண்டாள்.
"அப்ப நீ சும்மா கெஸ் பண்ணற, அவ்ளோதான? நான்கூட நீ ஏதோ பெருசா சொன்னயே, ஃபாரன்சிக் சயன்டிஸ்டுன்னு, அதுல ஏதாவது deduction பண்ணினயோன்னு நினைச்சேன்.."
அவள் கிண்டலாகச் சொல்ல, ஜெர்ரி அப்போதுகூட முகமாற்றம் காட்டாமல் நின்றான்.அதுவே அவளை உறுத்தியது.
'என்ன இவன்? சிரித்தாலும் முறைத்தாலும் மரம்போல நிற்கும் மனிதன்... இவன் மனிதனா, இல்லை மெஷினா?'பெருமூச்செரிந்தவள், தனது கையடக்கக் கேமராவைப் பையிலிருந்து எடுத்தாள்.
"எனக்கு ஒரு இன்டர்வியூ தர்றயா ஜெர்ரி? கேசை யாரு, எப்ப கண்டுபிடிச்சாங்க, எப்படி ஹாஸ்பிடலுக்கு கொண்டுவந்தாங்க.. இதையெல்லாம் சொல்லமுடியுமா?""சாரி ரேணு. சீஃப் டாக்டர் ஒருத்தர் வருவாரு. அவர்கிட்ட இதெல்லாம் பேசிக்க. நாங்க யாரும் டிவியில பேசக்கூடாதுன்னு அவர் சொல்லியிருக்காரு. நான் வரேன்."
"ஒரு நிமிஷம்!"
போக முயன்றவன் நிற்க, ரேணு சற்றே தயக்கமாக, "ஊருக்கு எப்ப போன கடைசியா?" என்றாள் தலையை சரித்து, அவன் கண்களைப் பார்க்காமல்.
'ஊர் ஞாபகம் இப்போதெல்லாம் மிகமிக அதிகமாக, அடிக்கடி வந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது ஊரைப் பார்த்து. அம்மாவை, அப்பாவை, தம்பியை...
அவன் அப்போது பொறியியல் முதலாமாண்டு சேர்ந்திருந்தானல்லவா? இப்போது என்ன செய்துகொண்டிருப்பான்? செமஸ்டரா? விடுமுறையா?'ஜெர்ரி தோளைக் குலுக்கிவிட்டு, "மூணு மாசமாச்சு. வேலை கிடைச்சபோது, அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை தாத்தாகிட்ட காட்டப் போனேன். ஏன்?" என்றான்.
"ஓ.." என்று மட்டும் சொன்னாள் அவள். வேறென்ன சொல்வாள் இவனிடம்!?

YOU ARE READING
உயிர்வரை தேடிச்சென்று
Mystery / Thrillerவாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம். என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்...