5

319 29 6
                                    

அந்த செய்தியைத் தொடரலாமா என்று யோசித்தபடி அவள் அமர்ந்திருக்க, திடீரென மின்சாரம் தடைப்பட்டு, கணினி கீய்ங்கென அதன் உயிரை விட்டது. திடுக்கிட்டு அவள் நிமிர, மொத்த அறையுமே இருட்டடைந்துதான் இருந்தது.

"என்ன ஆச்சு?"
கலவரமாக வினவினாள் அவள்.

"பாத்தாத் தெரில? பவர்கட்! ஜெனரேட்டருக்கு டீசல் போடலை போல. உங்க தலைப்புச் செய்திக்கு நேரம் செரியில்ல மேடம்!"
பக்கத்து மேசையில் அமர்ந்திருந்தவன் நக்கலடித்தான். கூடவே விஷமச்சிரிப்பு வேறு. பொறுமை பறந்தது ரேணுவுக்கு.

சுறுசுறுவெனக் கோபம் தலைக்கேறிட, தனது கைபேசியை எடுத்துப் பையில் போட்டு அதைத் தோளில் மாட்டிக்கொண்டவள், "சந்தோஷம்!! ஜெனரேட்டரை மாதிரியே நீயும் தண்டமாவே இரு ஆபிஸ்ல!!" என்று அவனிடம் வேகமாகக் கத்திவிட்டு, அதிர்ந்து பார்த்த எவரையும் கண்டுகொள்ளாமல் அதிவேகமாக வெளியேறித் தனது ஆக்சஸை அடைந்து, அதை உயிர்ப்பித்து முறுக்கினாள், செய்திக்காக.


'கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை'.

தோராயமாக நான்கைந்து மாடிகள் கொண்ட கட்டிடம். மக்கள் கூட்டம் தேனீக்கள் போல சதா சர்வகாலமும் மொய்த்துக் கொண்டிருந்தாலும், அந்தப் பிரவாகத்திலிருந்து அப்பாற்பட்ட ஒரு தனித்தன்மை கொண்டிருந்தது அது. மஞ்சளாகிக்கொண்டிருக்கும் வெள்ளைச் சுவர்கள் வெளிச்சமான அந்தக் காலை வேளையிலும் அழுதுவடிந்து காட்சியளிக்க, ஏனோ அது தன் மனநிலையைப் பிரதிபலிப்பதைப் போல் உணர்ந்தவள், சற்றே தனக்குள் திகைத்து, தனக்கு மனநலம் சரியாக இருக்கிறதா, இல்லை இங்கேயே ஒரு டெஸ்ட் எடுத்துக்கொள்ளலாமா என யோசித்தவாறே, காம்ப்பவுண்ட் சுவரருகில் மரத்தோரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, கேட்டில் நின்றுகொண்டிருந்த காவலாளியை அணுகினாள்.

"காலைல இங்க ஏதோ அடையாளம் தெரியாத பாடி வந்துச்சாமே.. ரோட் ஆக்சிடெண்ட்ல.. எங்க போனா பாக்கலாம்?"

உயிர்வரை தேடிச்சென்றுWhere stories live. Discover now