27

260 31 2
                                    

விடுவிடுவெனத் தன்னைக் கைப்பிடித்து அவள் இழுக்க, ஜெர்ரி சர்வநாடியும் ஒடுங்கிப்போய் உறைந்துவிட்டான்.

"ரேணு ரேணு ரேணு ரேணு... கையை விடு ப்ளீஸ்...!! ப்ளீஸ்!!"

பார்ப்போரெல்லாம் முகம்சுழிக்க, ரேணு வேகமாய், வேண்டுமென்றே வேகமாய், அவன் கையைப் பட்டென விட்டாள் முரட்டுத்தனமாக.
"ப்ரைவேட் சைக்கியாட்ரிஸ்ட்?? ம்ம்?? ராயப்பேட்டை கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல ப்ரைவேட் சைக்கியாட்ரிஸ்ட்! ஆஹா, எவ்ளோ நல்லா பார்க்கறாரு!! ரொம்ப தேங்க்ஸ் ஜெர்ரி! மறக்கவே மாட்டேன் உங்களை!! சே!!"

ஜெர்ரி வழக்கமான அமைதிப் பாவத்திற்குத் திரும்பினான். அரசு மருத்துவமனை நுழைவாயிலில் இருவரும் நின்றிருக்க, அங்கேயே கைகட்டி நின்று, "டாக்டர் ரஹீம் என்னோட ப்ரொஃபசரோட க்ளோஸ் ஃப்ரெண்ட். அவர்கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்க ரொம்ப கஷ்டப்பட்டேன்.. அதுவும் ஜிஹெச்ல, அவரோட வொர்க்கிங் ஹவர்ல. அவரோட ப்ரைவேட் க்ளினிக்ல ஈஸியா சிட்டிங் வாங்கிடலாம், என்ன.. அம்பதாயிரம் டெபாசிட் கட்டணும், அட்மிஷன் போடவே. அது உன்னால முடியாதுன்னு தோணுச்சு, அதான், இங்கயே கன்சல்டேஷன் வச்சுக்கிட்டா, உனக்கு ஃபீஸ் கிடையாதுன்னு கூட்டிட்டு வந்தேன்." என மிகமிகப் பொறுமையாக விளக்கினான்.

ரேணுவுக்கு ஆத்திரமும் அழுகையும் மாறிமாறி வந்தது.

"பணம் கட்டினாத் தான் ஒழுங்கா பார்ப்பாரா? இங்க வந்தா, இப்படித் தான் ட்ரீட் பண்ணுவாரா?"

"என்ன பண்ணினார்?"

"போனதும் ஒண்ணுமே சொல்லல. 'என்ன பிரச்சனை?', 'என்ன பிரச்சனை?'ன்னு தேய்ஞ்ச ரெக்கார்டு மாதிரிக் கேட்டுக்கிட்டு இருந்தார், அவ்ளோதான்."

ஜெர்ரி அங்கிருந்த காத்திருப்பு நாற்காலி ஒன்றில் அமர்ந்தான். ரேணுவையும் அமருமாறு கைகாட்டினான்.

"சினிமாவுலயும், இங்க்லீஷ் வெப் சீரிய்ஸ்லயும் வர்றா மாதிரி, ஒரு சோபாவுல கால்நீட்டிப் படுக்க வச்சு உன்கிட்ட பேசற அளவுக்கு, தமிழ்நாடோ இந்தியாவோ இன்னும் கவுன்சிலிங்ல டெவலப் ஆகல ரேணு. மனநல பாதிப்பை 'பைத்தியம்'னு ஒரே வார்த்தைல அடக்கற சமூகத்துல, கவுன்சிலிங் இந்த அளவுக்கு வந்திருக்கறதே பெரிய விஷயம். சென்னைல ரஹீம் சார் மாதிரி சைக்கியாட்ரிஸ்டைப் பார்க்கறதே அபூர்வம். உங்கிட்ட வேற என்ன கேட்கணும்னு நினைக்கற நீ? நீயா உனக்கு என்ன பிரச்சனைன்னு சொன்னா தானே அவர் ட்ரீட்மெண்ட் குடுப்பார்? உடம்புல பிரச்சனை இருந்தா, டாக்டர்கிட்ட அதை நேரே சொல்றோம்ல? அப்ப மனசுல இருக்கறதையும் சொல்லணும்தானே?"

உயிர்வரை தேடிச்சென்றுWhere stories live. Discover now