14

279 26 9
                                    

ரேணு பாதிக் கோபமும், பாதி சோகமுமாய் அங்கேயே நின்றாள். மன்னிப்புக் கேட்கலாமென மூளை சொன்னாலும், பசிக்காறது, போய் சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்றது வயிறு. சரியென அம்மிணி மெஸ்ஸுக்கு வண்டியை செலுத்தினாள் அவள்.

அம்மணி மெஸ் மூலம் தனது அன்றாட வருவாயை எட்ட அயராது போராடிக்கொண்டிருந்த இசக்கி, ரேணுவைப் பார்த்ததும் முகமலர்ந்து சிரித்தார்.

"வாங்கம்மா.. எனக்குத் தெரியும், நீங்க கூடிய சீக்கரத்துலயே நல்ல நெலமைக்கு வருவீங்கன்னு!"

"நல்ல நிலமையா? உங்க பருப்பு சாதத்தை சாப்பிட வர்றதையா சொல்றீங்க?"

ரேணு தோளைக் குலுக்கிவிட்டு ஒரு தட்டில் தானே கொஞ்சம் சாதத்தை மீட்டிப் போட்டுக்கொண்டு பெஞ்ச்சில் அமர்ந்தாள்.

அவரும் பின்னாலேயே வந்து, தனது பனியனில் வைத்திருந்த கைபேசியை எடுத்துக் காட்டினார். யூட்யூபில் கிட்டத்தட்ட முப்பது, முப்பத்தைந்து காணொளிகள் அவள் பெயரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் புகைப்படத்தையும் கொண்டிருந்தன.

'சென்னை செய்தியாளரின் துணிகர குற்றச்சாட்டு.'

'அரசு மருத்துவமனையில் அரங்கேறும் அராஜகங்களை வேரறுக்கும் இளம் செய்தியாளர்.'

இப்படிப் பல.

ரேணு அதிர்ச்சியில் உறைந்தாள். இசக்கி உற்சாகமாகத் தொடர்ந்தார்.

"என்னம்மா, நல்ல விஷயம்தானே இது? நாட்டுல நடக்குற அநியாயங்களைத் தட்டிக்கேட்க, உங்களை மாதிரி ஆள்தான் வரணும்.. நீங்க சாயங்காலம் என்ன நியூஸ் சொல்லப் போறீங்கன்னு நாங்கள்லாம் எவ்ளோ ஆர்வமா இருக்கோம் தெரியுமா?"

அவர் பேசுவது எதுவும் காதில் விழவில்லை அவளுக்கு. கைபேசியில் மீண்டும் யூட்யூப் செயலியைத் திறந்து தங்களது சேனலைப் பார்த்தாள்.

இருபத்தையாயிரம் பார்வைகளும், இரண்டாயிரம் பகிர்வுகளும் இருந்தது அதில்.

உயிர்வரை தேடிச்சென்றுWhere stories live. Discover now