21

189 30 11
                                    

அந்த மருத்துவமனைப் பணியாளர் ரேணுவின் பின்னாலேயே விசுவாசமாக வர, ரேணுவிற்குத் தனது திட்டத்திற்கான நேரம் வந்துவிட்டதெனப் புரிந்தது.

எதையோ மறந்ததுபோல நின்றவள், "ஆமா அண்ணே, நேத்து வந்த டெட்பாடியோட போஸ்ட்மார்ட்டம் நடந்துருச்சா?" என அவரிடம் வினவினாள் பதவிசாக.

அவர் தலையசைத்து, "ஓ.. சீனியர் டாக்டரெல்லாம் பொணத்தைத் தொடமாட்டாங்க மேடம்.. எடுபிடிங்க தான் செய்வானுக. சும்மா ரம்பத்தை வச்சு அறுத்துப் பாத்துட்டு, 'ஆக்சிடெண்ட் டெத்' அப்டினு எழுதிக்க சொல்லிட்டாரு இந்த டாக்டரு. அதைத்தான் செஞ்சிருக்காங்க.." என்றார்.

மனோவும் ரேணுவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

வெளியே வந்தபோது, ரேணு சோர்வாகத் தலையசைக்க, "அடுத்து என்ன?" என்றான் மனோ.

"போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் ஒருமுறை போலீசுக்குப் போயிட்டா, மறுபடி அதை மாத்த முடியாது. கேஸ் ஒரு தப்பான திருப்பத்துல போகறதுக்கு இது ஒரு காரணமாகிடும். நியூசும் வீணாப் போயிடும்."

"சரி.. அப்ப என்ன பண்ணப்போறோம்?"

"ஜெர்ரியை உடனே பாக்கணும்."

*

சென்னை சாந்தோம் பேராலயம்.

ஓங்கியுயர்ந்த சுவர்களின் உச்சியில் பலவண்ணக் கண்ணாடிச் சாளரங்கள் வெளிச்சத்தை ஓவியமாக மாற்றிக்கொண்டிருக்க, வளைந்த சுவர்கள் கூடுமிடங்களில் விழுந்த ஓசைகள் பன்மடங்காய் எதிரொலிக்க, அப்பெரிய பிரார்த்தனைக் கூடத்தின் தலையாய மூலையில் சிலுவையில் ஏசுநாதர் துஞ்சியிருக்க, அவர்முன் நின்ற வெண்ணிற அங்கிப் பாதிரியார் தன் கையிலிருந்த வேதாகமத்தை வெகு சிரத்தையாக வாசித்துக்கொண்டிருந்தார்.

பாதிரியாரின் குரலின் ஏற்ற இரக்கங்களும், உடன் பாடும் கூட்டத்தின் சுருதி லயங்களும் ஆலயத்தை மந்திரக் கட்டுக்குள் வைத்திருக்க, விர்ரென ஜெர்ரியின் பின்பாக்கெட்டில் அதிர்ந்த கைபேசி அவனைத்தவிர யாரையும் பாதிக்கவில்லை.

உயிர்வரை தேடிச்சென்றுWhere stories live. Discover now