Welcome.

1.8K 33 34
                                    

🎶We wish you a merry Christmas, We wish you a merry Christmas, We wish you a merry Christmas and a Happy new year!!🎶
😊😊🎄🎅🎄🎁🎄😊😊🌿🎆🌿🎆🌿😊😊

Thanks for all the support that you all have been showing me!!! Thanks for Yathumagi and everything!!!

And As promised, I've arrived with Jerry!!

பதினைந்து ட்ராஃப்ட் வச்சுக்கிட்டு எதை அடுத்ததா தொடரலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்போ, திடீர்னு ஒரு டிஸ்கஷன் நடந்து, கிளி சீட்டு எடுத்துக் குடுத்த மாதிரி இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்துக் குடுத்தது விதி

Ops! Esta imagem não segue nossas diretrizes de conteúdo. Para continuar a publicação, tente removê-la ou carregar outra.


பதினைந்து ட்ராஃப்ட் வச்சுக்கிட்டு எதை அடுத்ததா தொடரலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்போ, திடீர்னு ஒரு டிஸ்கஷன் நடந்து, கிளி சீட்டு எடுத்துக் குடுத்த மாதிரி இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்துக் குடுத்தது விதி.

துப்பறியும் கதைகள் எழுதுவதும் என்னுடைய நீண்டநாள் கனவுகளில் ஒன்று. துப்பறியும் சாம்பு முதல் சங்கர்லால் வரை படித்தும் பத்தாது, Famous five, Nancy drew எல்லாம் கூட வாசித்ததுண்டு.

இரவுகளில் போர்வைக்குள் கைபேசியை வைத்துக்கொண்டு, கணேஷ்-வசந்தைப் படித்துக் காதல்கொண்டு திரிந்த கூட்டத்தில் அடியேனும் ஒரு உறுப்பினர். அதில் பெருமைதான் படுகிறேன் இன்றும். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ஆகப்போகின்றது, கணேஷ்-வசந்த் நம் கதையுலகில் அடியெடுத்து வைத்து. இன்னும் இளமை குறையாத மார்க்கண்டேயர்களாய் படிப்பவர் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்ளும் பாத்திரங்கள் அவர்கள்.

அதைப்போல ஒரு கதையை அடுத்ததாக எழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, தீபாவளி வந்தது. ஒரு கலந்துரையாடல் நிகழ்ந்தது. அதில் ஒரு பாத்திரமும் பிறந்தது.

ஜெர்ரி.

ஒரு சராசரி ஆண்மகன், நாவலின் பிரதான கதாபாத்திரமாக ஏன் இருக்கக் கூடாது என்ற கேள்விக்கு விடையளிக்கப் பிறந்தவன்.

அப்போ, ஜெர்ரி ஒரு டிடெக்டிவா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியா, அப்போ அவன் யார்? சொல்றேன்.. கதைல!

முதல் அத்தியாயம் எழுதும்போது, இன்னும் சுஜாதாவின் தாக்கம் என் எழுத்துக்கள்ல, மனசுல இருந்து விடுபடலை என்பது புரிந்தது. அதுவும் தொடர்ச்சியா, மருந்து மாதிரி ஒரு நாளைக்கு ரெண்டு கதை அவரோடது படிச்சிட்டே இருந்தாலோ என்னவோ, அவரோட அந்த இலகுவான கதைசொல்லும் தொனி, அப்படியே இந்தக் கதையிலும் கொஞ்சம் ஒட்டிக்கிட்டது.

ஆம், heavily inspired from Sujatha's works. அதிலும் பெருமை மட்டும்தான் படுகிறேன்.

கதை ரொம்ப யதார்த்தமானது தான், நாம் வாழ்க்கையில் பார்க்கும் சராசரி மனிதர்கள்.. அவர்களது பிரச்சினைகள், சோகங்கள், கோபங்கள், கேள்விகள், அப்புறம் கொஞ்சம் சந்தோஷங்கள் கூட..

காலேஜுக்குத் திரும்பி வந்தாச்சு, இருந்தாலும் லீவுல பார்த்த நிறைய இங்கிலீஷ் சீரீஸ் எல்லாம் இன்னும் மண்டைக்குள்ள ஓடிட்டே தான் இருக்கு. அதுவும் இந்த detective, slow burn, mystery thriller கதைகள் எல்லாம்... வேற லெவல் தான். சோ, நம்ம கதைக்கும் அந்தமாதிரி ஒரு ட்விஸ்ட் குடுக்கலாமான்னு யோசித்தபோது, ஒரு பிரதான கதையைச் சுற்றி பல உபகதைகள் வைத்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. செயல்படுத்திப் பார்க்க உள்ளேன்.

வழக்கம்போல, ஒவ்வொரு நாவலும் ஒரு புதிய முயற்சி தான். முந்தைய கதையில் செய்யாத ஒரு விஷயத்தை அடுத்த கதையில் செய்யவேண்டும் என்பதே என்னுடைய கொள்கை.

அதன்படி, 'நீயன்றி வேறில்லை' கதையில், காதல் 80%, மர்மம் 20% இருந்தது. நான்கு அத்தியாயம் எழுதினால் அதில் மூன்று அத்தியாயத்துக்கு வானதியும் திவாகரும் மட்டும்தான் காதலித்துக்கொண்டு இருப்பார்கள். விசாரணை, தேடல் அதெல்லாம் அங்கங்கே, அப்பப்போ மட்டும் நடக்கும்.

அதனால் இம்முறை ratioவை மாற்றப் போகிறோம்.

Romance 20%, Mystery 80%.

எளிமையான கதை தான், எப்பவும் போல, எழுத்துப்பிழைகள் இருக்காது. கொஞ்சம் அல்ல நிறைய இடங்களில் பெண்ணியம் பேசப்படும்.

இதில் ஜெர்ரி எங்கே வருகிறான் என்பவர்களுக்கு என் பதில்,... பொறுமை ப்ளீஸ். ஒரு சுஜாதா நாவலில், கடைசி அத்தியாயத்துக்கு முந்தையதில் தான் வருவார்கள் கணேஷ்-வசந்த். ஆனால் அந்த அளவுக்குக் கொண்டுபோகவில்லை. வெகுவிரைவில் ஜெர்ரி வந்துவிடுவார் உங்களைக் காண.

So, without further ado, off to storytelling!!

Love,
Madhu_dr_cool

Fb, Twitter, Instagram as Madhu_dr_cool.

P.S. Wanna talk about Sujatha novels? Ping me!😊

உயிர்வரை தேடிச்சென்றுOnde histórias criam vida. Descubra agora