26

185 28 5
                                    

அண்ணா நகர். மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் ஜன்னல்கள் திறக்கும்போது கிறீச்சிட்டன.

கையில் ஒட்டிய தூசியைத் துப்பட்டாவில் துடைத்தவாறே ஜன்னலுக்கு அருகே நாற்காலியில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்தாள் ரேணு.

அவளருகே தன் கைக்கடிகாரத்தில் முழுக்கவனத்தையும் பதித்தபடி ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தான் ஜெர்ரி.

"ப்ச்.. இன்னும் எவ்வளவு நேரம் வெயிட் பண்ணனும்.. எனக்கு போரடிக்குது..."

"க்ரைம் ப்ராஞ்ச் இன்ஸ்பெக்டர் இன்னும் வரல. ரிசெப்ஷனிஸ்ட் தான் இங்க வெய்ட் பண்ண சொன்னாங்க."

"நீ ஒழுங்கா கேட்டிருக்க மாட்ட.."

ஜெர்ரி தோளைக் குலுக்கினான் பட்டும்படாமல்.

ரேணு ஆயாசமானாள்.
"ப்ச்.. எதுக்கு என்னைப் பார்க்கணும்னு சொன்னாரு? எப்படியும் கேஸை பத்தி எந்தத் தகவலும் மீடியாவுக்குத் தரப்போறதில்ல.. அப்பறம் என்னவாம்??"

ஜெர்ரி அமைதியாக அமர்ந்திருக்க, ரேணு மீண்டும் 'ம்ம்?' என்றாள் அவனிடம்.

"தெரியாது. பார்க்கணும்னு சொன்னார்."

"ஹ்ம்ம்.. நாப்பதுல தொப்பையைத் தள்ளிட்டு க்ரைம் ப்ராஞ்ச்சுக்கு வந்துவாங்க.. சீட்டுல உக்காந்துக்கிட்டு நம்மளை ஏவல் பண்ணவேண்டிது--"

அவள் சலிப்பாகப் பேசிக்கொண்டே திரும்ப, ஆறரை அடி உயரத்திற்கு ஒரு இஸ்திரி செய்யப்பட்ட காக்கிச் சீருடை, கான்கிரீட் தரையில் தனது பூட்ஸ் கால்களால் சத்தப்படுத்தியவாறு ராணுவ ஒழுங்கில் நடந்துவர, ரேணு வாய்பிளந்தாள்.

ஜெர்ரியும் அந்த சத்தத்தில் நிமிர்ந்தான்.
"இவர்தான்.."

அவன் எழுந்து அக்காவலரிடம் கைகுலுக்க, ரேணு திறந்தவாய் மூடாமல் அப்படியே அமர்ந்திருக்க, காவலரின் ஒற்றைப் புருவம் கேள்வியாக வளைந்தது.

ரேணு அதில் சுதாரித்து, சட்டென எழுந்து நின்றாள்.
"ஹலோ சார். ரேணுகா ராமன்."

உயிர்வரை தேடிச்சென்றுWhere stories live. Discover now