19

211 31 17
                                    


ரேணு நேரங்கழித்து விழித்து, நாட்காட்டியில் ஞாயிறெனப் பார்த்துவிட்டு மீண்டும் தூங்க எத்தனிக்க, கதவு தட்டப்படும் சத்தம் அவள் உறக்கத்தைக் கலைத்தது. வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவாறே எழுந்தாள் அவள்.

"யாரு??"

"கேஸ் சிலிண்டர் மேடம். ஆன்லைன்ல புக் பண்ணியிருந்தீங்களே!"

அவசரமாகத் தலையைக் கோதி சரிசெய்துகொண்டு, துப்பட்டாவை எடுத்துக் கழுத்தோடு போர்த்திக்கொண்டு கதவைத் திறந்தாள் அவள்.

"இங்கயே வைக்கவா மேடம்?"

"ஹான் இப்படி வச்சிருங்க. எம்ப்டி இதோ இருக்கு."

"ம்ம். எண்ணூத்தி அம்பது ரூவா மேடம்."

இரண்டு ஐநூறுகளைக் கொடுத்து சில்லரை வாங்கிக்கொண்டு, கதவை மூட மனமின்றி ஒருக்களித்து சாத்திவிட்டு, சிலிண்டரை சாய்த்து உருட்டிக்கொண்டும் முனகிக்கொண்டும் எப்படியோ சமையலறையை அடைந்துவிட்டாள் அவள்.

'ரெண்டு நாளா சமைக்காமலே வெளிய வாங்கி சாப்பிட்டதுகூட நல்லாத்தான் இருந்தது.. இப்ப சிலிண்டர் வந்துடுச்சு.. இனி உனக்கு வேலையும் வந்துடுச்சு ரேணு'

தனக்குள்ளாகவே சிரித்துக்கொண்டு, சிலிண்டரைப் பொருத்தி ஒருமுறை அடுப்பை மூட்டிப் பார்த்துவிட்டு, ஒரு கொட்டாவியை அடக்கியவாறே சிங்க்கைப் பார்த்தாள். பெருமூச்சுடன் தண்ணீரைத் திறந்துவிட்டு, பாத்திரங்களைத் துலக்கத் தொடங்கினாள். சுமார் முக்கால் மணிநேரம் கைகள் தேயத் துலக்கிவிட்டு, பாத்திரங்களை அலசிக் கவிழ்த்துவிட்டு கூடத்துக்கு வந்தவள், கலைந்து கிடந்த பொருட்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நிமிர்ந்தால் மணி பன்னிரெண்டாகியிருந்தது.

பசி வயிற்றைக் கிள்ளியது.

என்றோ வாங்கிவைத்த உருளைச் சீவல் பாக்கெட் ஒன்றுமட்டும் சோகமாக அலமாரியில் அமர்ந்திருக்க, அதைப் பிரித்து ஒன்றிரண்டை வாயில் திணித்தவாறே மற்ற அலமாரிகளைத் திறந்து சமைப்பதற்குத் தேவையான பொருட்களை எடுத்தாள் அவள்.

உயிர்வரை தேடிச்சென்றுWhere stories live. Discover now