17

187 28 16
                                    

இரவு ஒன்பதரை மணிக்கு, கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை அதன் வழக்கமான ஜனக் கூட்டத்துடன் ஓய்வில் இருந்தது. உள்நோயாளிகளைத் தூங்கச் சொல்லி செவலியர்கள் விரட்ட, பார்வையாளர்கள் பிடிவாதமாய் அங்குமிங்கும் தொற்றிக்கொண்டு நிற்க, வெளிநோயாளிகள் பிரிவு முற்றிலுமாக மூடப்பட்டு வந்தவர்கள் எல்லாம் விரட்டப்பட்டுக் கொண்டிருக்க, நான்கைந்து ஆம்புலன்ஸ்களின் ஓலமும் கேட்டுக்கொண்டிருந்தன.

ஜெர்ரிக்கு அந்த ஓசைகளெல்லாம் பழக்கப்பட்டுப் போயிருந்ததால், பின்னணியில் வெள்ளை இரைச்சலாகத் தான் அவையெல்லாம் இருந்தன அவனுக்கு.

சுண்ணாம்புச் சுவர்களில் கண்களைப் பதித்தபடி முன்னும் பின்னும் நடந்துகொண்டிருந்த ஜெர்ரியின் விழிகள், தன்னெதிரே தள்ளிக்கொண்டு வரப்பட்ட ஸ்ட்ரெட்சரின்மீது பட்டதும் அதிர்ச்சியில் சற்றே விரிந்தன. பொதுவாக அம்மாதிரியான உணர்ச்சிகளை அவன்முகத்தில் பார்த்திருக்க இயலாது. ஆனால் இம்முறை காட்சியின் தீவிரம் அவனது கட்டுப்பாட்டை உடைத்திருந்தது.

ஸ்ட்ரெட்சரைத் தள்ளிக்கொண்டு வந்த அட்டெண்டரை நிமிர்ந்து பார்த்தான் அவன்.

"மார்ச்சுவரில இருந்த பாடியை இங்க எப்படி கொண்டு வந்தீங்க??"

அந்தப் பணியாளரோ அவனைக் குழப்பமாகப் பார்த்தார்.
"டாக்டர், இது புது கேஸ் சார்! இப்பதான் மதுரவாயல் தர்மாஸ்பத்திரில இருந்து இட்டுனு வர்றோம்! தோ ஏட்டைய்யா முன்னால நிக்கிறாரு பாருங்க.."

ஜெர்ரி லேசாக வாய்திறந்தான் அதிர்ச்சியால். அந்த அடையாளமிழந்த முகத்தை அவனால் புதிதென நம்ப முடியவில்லை. வெள்ளைத் துணியில் ஆங்காங்கே இரத்தக் கறைகள் பட்டிருக்க, சிதைந்திருந்த அம்முகத்தைப் பார்த்தவனின் மூளை விர்ரென சுழலத் தொடங்கியிருந்தது.

காவல்துறை அலுவலர் ஒருவர் அவனைநோக்கி வந்துகொண்டிருந்தார்.
"ஆக்சிடெண்ட் கேஸ் சார். மதுரவாயல்ல பாத்துட்டு, போஸ்ட்மார்ட்டம் பண்றதுக்கு எழுதிக் குடுத்துட்டாங்க. இந்தாங்க.." என்றபடி ஒரு கத்தை காகிதங்களை நீட்டினார்.

உயிர்வரை தேடிச்சென்றுحيث تعيش القصص. اكتشف الآن