24

216 28 7
                                    

க்ளோப் தொலைக்காட்சியின் செய்தி சேனலில் வந்து ரிமோட் நிற்க, அதில் விரைவுச் செய்திகள் ஓடிக்கொண்டிருக்க, ஜெனி திரையில் கண்களைப் பதித்தாள் கூர்மையாக.

".. எனவே தற்போது முகப்பேர் கிழக்குக் காவல் நிலைய ஆய்வாளரான கலைச்செல்வியைத் தொடர்புகொள்ள நமது நிருபர் முயன்றபோது, அவர் செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார். ஆனால் நள்ளிரவில் இணையத்தில் வைரலாகப் பரவிய செய்தித் தொகுப்பின்படி, சென்னை மாநகரில்  கொலைத்தொடர் எனப்படும் சீரியல் கில்லிங் நடந்துவருவது வெளியாகியுள்ளது. சங்கம் டிவியின் செய்தியாளர் ரேணுகாவின் இந்தத் துணிகரமான முயற்சிக்கு, ஆய்வாளரும் உடந்தையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சற்றுமுன்னர் மீண்டும் ஒரு காணொளி வெளியாகியுள்ளது. அந்த சர்ச்சைக்குரிய செய்தித் தொகுப்பு உங்களுக்காக.."

"என்னடா சொல்றாங்க? சென்னைல சீரியல் கில்லரா? இதெல்லாம் ஹாலிவுட் படத்துல தானடா வரும்? இப்ப என்ன நம்ம ஊர்லயும் இந்தமாதிரி நடக்குது?"

ஜெர்ரி வாய்திறக்குமுன் திரையில் சற்றே மங்கலான வெளிச்சத்தில் தோன்றிய ரேணுவின் உருவம் அழுத்தமான பார்வையோடு, சற்றுமுன் அவனும்கூட நின்றிருந்தபோது கண்டறிந்த உண்மைகளை கேமராவிடம் கூறிக்கொண்டிருந்தாள்.

ரேணுவின் தீர்க்கமான குரல் தொலைக்காட்சியின் ஒலிபெருக்கி மூலம் வரவேற்பறையை நிறைத்தது.
"இவ்வழக்கின் ஆலோசகரான அரசு மருத்துவ நிபுணரின் கருத்துரையின் மூலம், கடந்த மூன்று மாதங்களில் நிகழ்ந்த நான்கு கொலைகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை அறிந்துள்ளோம். மதிப்பிற்குரிய ஆய்வாளர் இதனை இருபத்தி நான்கு மணிநேரங்களுக்குள் கண்டறிந்த விதம் பாராட்டிற்குரியது. இறந்தவர்களில் அடையாளங்களைத் தேடும் பணியையும், இதே தீவிரத்தோடு அவர் கையாண்டு வருகிறார் என்பதையும், நகரவாசிகளுக்கு நம்பிக்கையாகத் தெரிவிக்கிறோம்.."

அதனைத் தொடர்ந்து சில வரைபடங்கள், சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்களை சிவப்பு நிற அம்புக்குறியிட்டுக் காட்டின திரையில்.

உயிர்வரை தேடிச்சென்றுWhere stories live. Discover now