சென்னை, நுங்கம்பாக்கம்.
"ஹாய் நேயர்களே!! நீங்க பாத்துட்டு இருக்கறது உங்களோட ஃபேவரிட் ஷோ, 'டூயட் பாட்டு' ; நான் உங்க வி.ஜே. சிந்தியா! இப்ப நம்ம ஷோவோட அடுத்த காலர் லைன்ல வர்றாங்க.. யாருன்னு பாக்கலாம், ஹலோ, வணக்கம் யார் பேசறது?"
அளவுக்கதிகமாய் அரிதாரமும், அரைகுறையாக ஆடையும் அணிந்துகொண்டு, செயற்கைத்தனமாக ஒரு பெண் கொஞ்சிப் பேசிக்கொண்டிருக்க, அதை நான்கைந்து கோணத்திலும் விளக்கடித்து ஒரு கேமரா படம்பிடித்துக்கொண்டிருக்க, ஆட்கள் அங்குமிங்கும் நடந்துகொண்டிருக்க, மின் வயர்கள் கரும்பாம்புகளாய்த் தரையெங்கும் ஊர்ந்திருக்க, கணினியின்முன் அமர்ந்து இரண்டுபேர் எதையோ தட்டிக்கொண்டிருக்க, அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகத்தின் மற்ற பிரிவுகளைப்போலவே இங்கும் சுரத்தின்றி நடந்துகொண்டிருந்தன வேலைகள்.
ஒசைபுகாத அந்தக் கண்ணாடி அறையின் வெளிப்புறம், தலையைப் பிடித்துக்கொண்டு இரு கண்களையும் இறுக்க மூடிக்கொண்டு அமர்ந்திருந்த பெண்ணிடம் வந்து நின்றான் ஒரு காரியதரிசி.
"ரேணு, மேனேஜர் உன்னை உள்ள கூப்பிட்டார்."
பணியாளர் அவளை அழைக்க, காரிடரில் நாற்காலியில் அமர்ந்திருந்த ரேணு எழுந்து அந்தக் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நடந்தாள். இஸ்திரி செய்யப்பட்ட சல்வார், எண்ணை தேய்த்திடாது வாரப்பட்ட சற்றே சுருளான கருங்கூந்தல், நெற்றியில் கீற்றாய் சந்தனம், தோளில் சற்றே நீளமான வார் கொண்ட பை.
தொகுப்பாளினி தனக்குக் கிடைத்த இடைவேளையில் தண்ணீர் அருந்திவிட்டு, தனது அலங்காரத்தை சரிசெய்துகொண்டிருக்க, ரேணு அறையின் மூலையில் இருந்த உயரமான தளத்தில் அமர்ந்திருந்த, சேனலின் மேலாளரின் அருகில் சென்று நின்றாள்.
YOU ARE READING
உயிர்வரை தேடிச்சென்று
Mystery / Thrillerவாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம். என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்...