சட்டென ரேணு அமைதியாகிவிடவும் திகைத்த ஜெர்ரி அவளிடம் ஏதும் கேட்குமுன் கைபேசி அடித்தது இருவருக்குமே.
ஜெர்ரியின் கைபேசியின் அழைப்புமணியாக வெறும் மணிச்சத்தமும், ரேணுவின் கைபேசியில் ஒரு இந்தி மெல்லிசைப் பாடலும் ஒரே நேரத்தில் ஒலித்தன.
இருவரும் ஒரேபோல் அழைப்பை ஏற்றுப் பேசிவிட்டு, திகைப்பான பார்வையோடு திரும்பி ஒருவரையொருவர் பார்த்தனர்.
"மனோ கூப்பிட்டிருந்தான். கேஸ்ல பெரிய திருப்பமாம்... இன்னொரு கொலையை கண்டுபிடிச்சிருக்காங்களாம்"
ரேணு அதிர்ச்சியாக சொல்ல, ஜெர்ரியும், "எனக்கு இன்ஸ்பெக்டர் ஃபோன் பண்ணி சொன்னாங்க. உடனே முகப்பேர் ஸ்டேஷனுக்கு வர சொன்னாங்க" என்றான்.
இருவரும் தாமதிக்காமல் அவரவர் வாகனங்களை எடுத்துக்கொண்டு முகப்பேர் கிழக்குக் காவல் நிலையத்திற்கு விரைந்தனர். மற்ற சேனல்கள் காலையிலேயே வந்து செய்தி சேகரித்துவிட்டுச் சென்றிருக்க, இப்போது காவல் நிலையமே வெறிச்சோடி இருந்தது.
ஆய்வாளர் அங்கே அவர்களுக்காகக் காத்திருப்பதுபோலவே அமர்ந்திருந்தார்.
"வாங்க டாக்டர், வாங்க ரிப்போர்ட்டர்."மனோ சுவரோரம் நின்றிருக்க, ஆய்வாளரை எதிர்பார்ப்போடு ஏறிட்டாள் அவள். அவர் ஜெர்ரியிடம் சில தரவுகளை நீட்டினார்.
"இதைப் பாருங்க டாக்டர். உங்க ஒப்பீனியனை சொல்லுங்க."ரேணு அவனது தோளுக்கு அருகில் நின்று எட்டிப் பார்க்க முயன்றபோது, ஜெர்ரி சட்டென சிலிர்த்தவாறு பின்நகர்ந்தான் அனிச்சையாகவே. ஆய்வாளரும் அதைக் கவனிக்கத் தவறவில்லை.
இரண்டு நிமிடங்கள் அக்காகிதங்களை உற்றுப் பார்த்தவன், "ஃபோட்டோஸ் எடுத்திருப்பாங்களே..?" என்றான் ஆய்வாளரிடம். அவர் தலையாட்டி ஆமோதித்துவிட்டு, தனது மேசை ட்ராயரிலிருந்து நான்கைந்து புகைப்படங்களை எடுத்து நீட்ட, ஜெர்ரி அதை வாங்க, அவனது மறுகையில் இருந்த தரவுகளை ரேணு வேகமாகப் பிடுங்கிக்கொண்டாள். ரேணு அதில் மும்முரமாகிவிட்ட நேரத்தில், ஜெர்ரி ஒவ்வொரு புகைப்படத்தையும் ஆழமாகப் பார்த்துவிட்டு மேசைமீது அவற்றைப் பரப்பினான்.
![](https://img.wattpad.com/cover/231809243-288-k98419.jpg)
YOU ARE READING
உயிர்வரை தேடிச்சென்று
Mystery / Thrillerவாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம். என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்...