ரேணு தன் காதுகளையே நம்பமுடியாமல், திகைப்பில் விழிவிரித்தாள்.
'உன் சீட்ட கிழிக்கப் போறாரு' என மேலாளர் விவரித்ததற்கும், அங்கே நடப்பதற்கும் இருந்த முரண்!
தொலைக்காட்சி நிறுவனத்தின் தாளாளர் அப்பாசாமி நாயுடு புன்னகை முகமாக அவளை வரவேற்றார்.
"சேனலையே ஒரு கலக்கு கலக்கிட்டயே!? வாம்மா ரேணுகா!"என்ன செய்வதெனத் தெரியாமல் அவள் திகைத்துப்போய் நிற்க, எடிட்டர் பணிவாக மதிய வணக்கமொன்றை வைத்தார் அவருக்கு.
"இருக்கட்டும் சார், எப்படி இருக்கீங்க, நான் திருப்பதி போயிட்டு வர்றதுக்குள்ள, ஒரு பூகம்பத்தையே கிளப்பிட்டீங்க எல்லாமா சேர்ந்து!?"
எடிட்டர் மழுப்பலாக சிரிக்க, ரேணுகா எதையோ சொல்ல வர, நாயுடுவே கையமர்த்தினார் அவளை.
"கிளம்பும்போது சேனலை மூடப்போறோம்னு தகவல் வந்தது, திருப்பதி சென்றால் திருப்பம் வரும்னு சொல்றாப்புல, தரிசனம் முடிஞ்சு ஊருக்குக் கிளம்பறப்போ சேனல் சென்ஸேஷனல் நியூசாகிடுச்சுன்னு தகவல் வருது.. ஹம்ம். அதுசரி, நியூஸ் என்ன?"
"சார், கீழ்ப்பாக்கம் ஜிஹெச்ல ஒரு அனாதைப் பொணம். மரணத்துக்கான காரணம் சரியாத் தெரியல, ஆனா கொலைன்னு நம்பப்படுது; சடலம் கண்டெடுக்கப்பட்ட அம்பத்தூர் எஸ்டேட் ஏரியா, முகப்பேர் காவல் எல்லைக்குட்பட்டதால, முகப்பேர் ஈஸ்ட் சி-4 போலீஸ் ஸ்டேஷன்தான் விசாரிக்கறாங்க.. அதனால அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர--"
"ஹ்ம், ஹ்ம், இருக்கட்டும்..", எனப் பாதியில் அவளை இடைமறித்தவர், மேசையிலிருந்து கடிதம்போன்ற ஒரு தாளை எடுத்தபடி, "நல்ல நியூஸாத்தான் இருக்கும்போல, அதான் இந்த லெட்டர் வந்திருக்கு.." என அதைக் காட்டினார்.
"சன் நியூஸ்ல இருந்து வந்திருக்கு. நம்ம சேனல் மேல இருக்கற கேசை விட்டுர்றாங்களாம்.. இந்த நியூசோட காப்பிரைட்ஸை விட்டுக்குடுத்தா."
எடிட்டரும் ரேணுவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். முதலாளியும் இருவரையும் பார்த்தார்.
![](https://img.wattpad.com/cover/231809243-288-k98419.jpg)
YOU ARE READING
உயிர்வரை தேடிச்சென்று
Mystery / Thrillerவாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம். என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்...