வார்த்தைகள் தீர்க்கையில் மௌனங்கள் அழகு -4

1.2K 45 30
                                    

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மனிதரின் மொழி கேட்டு
கேட்டு இதயம் பழுதாய்
உணதமைதியில் தானே
ஆனேன் முழுமுழுதாய்
இனிய தனிமையே
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

பூஜா போன் பேசிவிட்டு மீண்டும் உள்ளே வரும்போது அந்த புதியவன் உள்ளே அமர்ந்து பேசி கொண்டு இருந்தான் .அவன் அவளை பார்த்தான் .ஆனால் பூஜா அவன் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை .

அக்கா அப்போ நாங்க கிளம்புறோம் .எங்களுக்கு வேலை இருக்கு என்று பூஜா சொல்ல வள்ளி பேச ஆரம்பித்தாள் .

கண்டா பிள்ளே உங்க ஊரு பேச்சு வருதுல்லா .இவளும் மெட்ராஸ்லதான் வேலை பாக்கா.நீங்க இதுக்கு முன்னாடி அங்க வச்சி பாத்துருக்கிங்களா என்று கேட்டார் வள்ளி .அப்போதுதான் ஒரு சின்ன பையன் அருகில் அமர்ந்திருக்கும் அந்த இளைஞனை பார்த்தாள் பூஜா .அவளுக்கு அவனை பார்த்து என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை அவள் லேசாக புன்னகை செய்தாள் .

அவனும் அவளை பார்த்து லேசாக புன்னகை செய்துவிட்டு .வள்ளியை பார்த்து இதற்கு முன்பு தான் பார்த்தது இல்லை என்று சொன்னான்.

நல்ல பையன் .கவர்ட்மெண்ட் வேலை .மெட்ராஸ்ல சொந்தமா வீடு கூட இருக்கு .இப்போ இங்க இருந்த பழைய வீட இடிச்சு கட்டி இருக்காங்க .பையனுக்கு இங்க வீடு இருந்தாதான இப்போ எல்லாம் பொண்ணு குடுகாங்க அதான் .இங்க இப்போ வீடு கட்டி பால்காய்ச்சிக்கு விழிக்க வந்திருக்காங்க என்று புதிதாக வந்திருக்கும் அவனை பற்றி சம்மந்தமே இல்லாமல் பூஜா விடம் பெருமை பேசினார் வள்ளி .பூஜா மற்றும் அந்த இளைஞனுக்கும் ஒரு மாதிரி ஆனது .அவர்கள் வேறு வழி இல்லாமல் மீண்டும் புன்னகை செய்து கொண்டார்கள்.

அக்கா பஸ் இப்போ வர்ற நேரம் ஆகுது .நாங்க இப்போ கிளம்புறோம் .இல்லன்னா ஒரு மணி நேரம் வெய்ட் பண்ணனும் என்று கடிகாரத்தை பார்த்த படி சொன்னாள் பூஜா

ஓ சரி பிள்ளே அப்போ இனி வரும்ப பேசலாம் என்று சொன்னனார் வள்ளி. எப்போது அந்த வார்த்தையை சொல்லுவார் என்று காத்திருந்த பூஜா அவ்வளவு நேரம் சும்மா அமர்ந்து இருந்த தேவாவை அழைத்து கொண்டு தப்பித்தால் போதும் என்று அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் .

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Место, где живут истории. Откройте их для себя