வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு - 48

716 27 9
                                    

❤️கனவுகள் தேய்ந்ததென்று
கலங்கிட கூடாதென்று
தினம் தினம் இரவு வந்து
தூங்க சொல்லியதே
எனக்கென உன்னை தந்து
உனக்கு இரு கண்ணை தந்து
அதன் வழி எனது கனா காணசெல்லியதே
நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்
உன் மடி மெத்தை  மேல் மடங்கிக்கொள்கின்றேன்...❤️

தேவாவை ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் பார்த்தாள் அமிர்தா .

"ஹே தேவா என்ன ஆச்சு எதுக்கு நீ அழுற ... இது சந்தோசமான விஷயம்தானே", என்று கேட்டாள் அமிர்தா .

அவள் அப்படி கேட்டதும் சற்று விநோதமாக உணர்ந்தாள் தேவா .ஏன் என்றால் அவள் பார்த்த வரையில் அந்த கிட்டில் வெறும் ஒரே ஒரு கோடுதான் வந்திருந்தது .என்னதான் தேவா பெரிதாக குழந்தையைப்பைபற்றி எதிர்பார்க்கவில்லை என்றாலும் அமிர்தா டெஸ்ட் செய்து பார்க்கலாம் என்று சொல்லும்போது அவள் மனதில் குழந்தை இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை தோன்றிவிட்டது.

அதனால் ஒரே ஒரு கோடை பார்த்ததும் கொஞ்சம் வேதனைபட்டாள் .அதனால் அதை அமிர்தாவிடம்  சொல்ல வந்தாள் .ஆனால் அமிர்தா பார்க்கும்போது அதில் இரண்டு கோடு இருந்தது .அதனால் அமிர்தாக்கு தேவா அழுவதற்கான காரணம் கொஞ்சம் கூட புரியவில்லை.

"தேவா உன்கிட்டதான் கேக்குறேன் ஏன் அழுற?",என்று மீண்டும் கேட்டாள் அமிர்தா.

அப்போதுதான் தேவா  தன்னுடைய கையில் உள்ள கிட்டை மீண்டும் ஒருமுறை பார்த்தாள் அதில் அழகாக இரண்டு கோடுகள் இருந்தது .அதை பார்த்ததும் தேவாக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை ஏன் என்றால் தேவாவை பார்த்து இன்றுதான் குழந்தை பிறக்காது அது இது என்று சாபம் கொடுத்து இருந்தார் புவனா அந்த கவலையும் அவள் மனதில் இருந்தது .ஆனால் இதெல்லாம் ஒரு விஷயம் என்று நினைத்து கவலை படவேண்டாம் என்று கடவுளே சொல்வது போல இன்று அவளுக்கு குழந்தை வரப்போகிற விஷயம் தெரியவருகிறது .மகிழ்ச்சியில் என்ன செய்ய என்று தெரியாமல் வந்து நின்றவளை பார்த்த அமிர்தா .

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Tempat cerita menjadi hidup. Temukan sekarang