வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -12

1K 46 13
                                    

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தொடுவானம் சிவந்து
போகும் தொலை தூரம் குறைந்து
போகும் கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே
இனி உன்னை பிாிய
மாட்டேன் தொலை தூரம்
நகர மாட்டேன் முகம் பாா்க்க
தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

இரவு நேரம் சாப்பிட்டுவிட்டு தேவா அவர்கள் அறைக்கு வந்து விட்டாள் .வந்தவள் மாத்திரை போட்டுவிட்டு கொஞ்சம் நேரம் பூஜாவிடம் வீடியோ கால் மூலம் பேசிவிட்டு அமர்ந்திருந்தாள்.சூர்யா உள்ளே வந்தான் அவன் வந்த உடன் தரையில் அமர்ந்திருந்தவள் எழுந்து நின்றாள் .

என்ன மரியாதையா .மரியாதை எல்லாம் மனசுல இருந்தா போதும் .சரி ஏன் தரையில உக்காந்து இருக்க ஒண்ணு சேர்ல உக்காரு இல்ல பெட்டுல உக்காரு அதை விட்டுட்டு ஏன் தரையில உக்காந்துருக்க .என்று கேட்டான் சூர்யா .

தனக்கு பெட்டில் உக்காருவதை விட தரையில் உட்காருவதுதான் பிடித்திருக்கிறது என்று சைகை மூலம் சொன்னாள் தேவா ஆனால் அவள் சொன்னது சூர்யாக்கு புரியவில்லை .

என்ன சொல்ற நீ .பெட் விட தரை கிளீனா இருக்குன்னு சொல்றியா என்று கேட்டான் சூர்யா .

இல்லை என்று தலை அசைத்தாள் தேவா .



என்ன சொல்ல வர்ற நீ இப்போ என்று கேட்டான் சூர்யா. அவன் கேட்பது கோபமாக கேட்பது போல இருந்ததால் அவனை பயத்துடன் பார்த்தாள் தேவா [me; சிலர் அப்படித்தான் பேசுறத கேட்டாலே ரொம்ப கோப படுவாங்களோன்னு தோணும் ஆனா உண்மையா அவங்க ரொம்ப நல்ல மனசு உள்ளவங்களா இருப்பாங்க .நான் அந்த மாதிரி ஆட்களை பாதுருக்கேன் .நீங்களும் பாத்துருபிங்க .அந்த மாதிரி ஒரு கேரக்டர்தான் சூர்யா]


அவள் பயப்படுவதை உணர்ந்த சூர்யா அவள் அருகில் செல்ல ஒரு அடி முன்னால் எடுத்து வைக்க அவள் ஒரு அடி பின்னால் எடுத்து வைத்தாள் அதை பார்த்தவனுக்கு கொஞ்சம் கஷ்டமாகி விட்டது. இருந்தாலும் அவன் தன்னுடைய மனதில் என்ன நினைக்கிறான் என்பதை வெளிகாட்டி கொள்ள விரும்பவில்லை. சில நொடிகள் தயங்கியவன் பிறகு அவள் அருகில் சென்றான்.

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Où les histoires vivent. Découvrez maintenant