வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -32

1K 49 13
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீயே உன் சிறை
உன்னிடம் இருந்தே
வலது கால் வைத்தே
வெளியே வா மனிதி
வெளியே வா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

அமிர்தாவை பார்த்ததும் அதிர்ச்சியில் அப்படியே நின்றாள் அனு.

என்ன ஆச்சு அனு ஏன் நீ உன்னோட ஹஸ்பண்ட் கிட்ட அந்த மாதிரி பேசிட்டு இருந்த ஏதாவது பிரச்சனையா என்று அக்கறையுடன் கேட்டாள் அமிர்தா.

என்ன அண்ணி ஒட்டு கேட்டுட்டு இருக்கீங்களா உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட அசிங்கமாவே இல்லையா என்று கோபத்தில் பேசினாள் அனு.

அனு நீதான் சத்தமா பேசுன. அமைதியா இருக்க இடத்துல சத்தம் குறைவா பேசுனாலே சத்தம் அதிகமாதான் கேக்கும் அப்படி இருக்குறப்போ நீ பேசுனதே சத்தமாதான் பேசுன. ஒட்டு கேக்குற பழக்கம் எல்லாம் எனக்கு இல்லை சரியா ஆமா நானும் வந்ததுல இருந்து பாக்குறேன் நீ சரியே இல்லை என்ன ஆச்சு இப்போ நீ சொல்ல போறியா இல்லையா என்று கேட்டாள் அமிர்தா.

அவள் அப்படி கேட்டதும் அனுக்கு அழுகைதான் வந்தது.அவள் அமிர்தாவை அணைத்து கொண்டு அழ ஆரம்பித்தாள். அமிர்தாக்கு பதட்டம் ஆனது.

அனு என்ன ஆச்சு அனு எதுக்கு அனு அழுற சொல்லு அனு எனக்கு ரொம்ப பயமா இருக்கு  என்று கேட்டாள் அமிர்தா ஆனால் அனு தொடர்ந்து அழுதாள்.

அனு என்ன பாரு எதுக்கு அழுற. இப்போ கொஞ்சம் அழுறத நிறுத்து என்ன பிரச்சனைன்னாலும் என்கிட்ட சொல்லு நம்ம அதுக்கு தீர்வு கண்டு பிடிப்போம் என்று சொன்னாள் அமிர்தா அனு அமிர்தாவை பார்த்தாள்.

எல்லாம் முடிஞ்சு போச்சு அண்ணி என்னோட வாழ்க்கை இனி என்ன ஆக போகுதுன்னே தெரியல அண்ணி நானே என்னோட வாழ்க்கைல மண்ண தூக்கி போட்டுட்டேன் தப்பு பண்ணிட்டேன் அண்ணி என்று அழுதாள் அனு.

அனு நீ இந்த மாதிரி பேசுறது ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு ப்ளீஸ் அனு என்ன ஆச்சுன்னு சொல்லு என்று கேட்டாள் அமிர்தா.

அண்ணி என்னோட கல்யாணத்துக்கு முன்னாடி நீங்களும் அண்ணனும் லவ்
பண்ணிட்டு இருந்தப்போ எனக்கு என்னோட ஹஸ்பண்ட் கூட கல்யாணம் பிக்ஸ் பண்ணாங்க அப்போ இந்த கல்யாணம் பத்தி நீங்க என்கிட்ட என்ன சொன்னிங்கன்னு நியாபகம் இருக்கா என்று கேட்டாள் அனு அமிர்தா தான் என்ன சொன்னோம் என்று நினைத்து பார்த்தாள்.

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Место, где живут истории. Откройте их для себя