வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -37

1K 44 14
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

எந்தக் கலைஞனும்
அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப்
பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும்
அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம்
செல்லும் {nallaa iruku papa😁)
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

"நீங்க எனக்காகவா அழுறிங்க பூஜா ?"என்று ஜெய் கேட்ட உடன் என்ன சொல்ல என்று தெரியாமல் பூஜா மௌனமாக ஜெய் மீண்டும் அவளிடம்" எனக்காகவா அழுதிங்க?",என்று மீண்டும் கேட்டான் ஜெய்..

பூஜா எதுவும் பேசவில்லை அவளால் பேச முடியவில்லை....

"பூஜா உங்ககிட்டதான் கேக்குறேன்... ஓ சரி என்கிட்ட பேச விருப்பம் இல்லையா?.. அப்போ சரி நான் போன வைக்கிறேன் ",என்று ஜெய் சொல்ல இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள் இப்போது பேசினாள்.

"இல் ...இல்லை.. போன் வைக்காதீங்க ",
என்று சொன்ன பூஜா மீண்டும் மௌனம் ஆனாள்.

"அட என்னங்க நீங்க. எனக்காகதான் அழுறேன்னும் ஒத்துக்க மாட்டேங்குறிங்க. சரி வேற எதாவது பேசுவீங்கன்னு பாத்தா சைலன்ட்டா இருக்கீங்க என்ன உங்க பிரச்சனை. என்ன நீங்க இப்படி எல்லாம் பண்ணுறத பாத்துட்டு லவ் பண்ணுறீஙகளான்னு...", என்று ஜெய் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கும் முன்பாகவே" ஆமா" என்றாள் பூஜா.

அவளிடம் ஜெய் சாதாரணமாக அந்த கேள்வியை கேட்டான். நிச்சயம் பூஜா இல்லை என்று மறுப்பாள் என்றுதான் எதிர்பார்த்தான். ஆனால் அவன் எதிர்பார்த்ததுக்கு மாறாக அவள் ஆமாம் என்று சொல்லி விட்டாள். இப்போது ஜெய்க்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை.அவன் முகத்தில் தானாக புன்னகை தோன்றியது .சந்தோஷத்தில் துள்ளி குதித்தான்

"ஹெலோ நான் சொன்னது உங்களுக்கு கேட்டுச்சா ?",என்று கேட்டாள் பூஜா. அவள் அருகில் இருந்த பூஜாவின் தோழி அவளை "என்ன?", என்றுபோல கேட்க நீ கொஞ்சம் பக்கத்துல உள்ள ரூம்க்கு போறியா என்று கேட்டாள் பூஜா நடத்து நடத்து என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு சென்றாள் அந்த பெண்.

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Opowieści tętniące życiem. Odkryj je teraz