வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு-19

1.1K 47 20
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என்னை இங்கே
வர செய்தாய் என்னனவோ
பேச செய்தாய் புன்னகைகள்
பூக்க செய்தாய் இன்னும் என்ன
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

அன்று ஆபிஸ் சென்ற  பூஜாக்கு கவலையாகவே இருந்தது. சாயங்காலம் எல்லோரும் ஹாஸ்பிடல் சென்று பார்க்க முடிவு செய்தார்கள். பூஜாவும் ஹாஸ்பிடல் சென்றாள்.

சத்யாக்கு பெரிதாக அடி படவில்லை என்றாலும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் இரண்டு மாதம் டாக்டர் ஓய்வு எடுக்க சொல்லி விட்டார்.நண்பர்கள் எல்லாம் பேசிவிட்டு செல்ல பூஜா மட்டும் நின்று கொண்டிருந்தாள்.

ஏன் நிக்குற பூஜா உக்காரு என்று சொன்னான் சத்யா. பூஜா அவன் அருகில் இருந்த சேரை எடுத்து போட்டு உட்கார்ந்தாள்.

சத்யா நான் நேத்து அப்படி பேசுனதுனாலதான கவனகுறைவா வண்டி ஒட்டி  உங்களுக்கு ஆக்சிடண்ட் ஆச்சு. நான் பேசுனத நினைச்சு நீங்க ரொம்ப கஷ்ட பட்டுருப்பிங்கள்ல. உண்மைய சொல்லனும்னா எனக்கு உங்கள வேதனை படுத்தணும்ன்னு எண்ணம் இல்லை சத்யா. நீங்க மத்த பசங்க மாதிரி சும்மா பின்னாடி சுத்தி என்ன லவ் பண்ணு என்ன லவ் பண்ணுன்னு சொல்லி டார்ச்சர் பண்ணதே இல்லை. எனக்கு உண்மையா அந்த விசயத்துல உங்க மேல பெரிய மரியாதை இருக்கு சத்யா. ஆனால் என்ன பண்ண மரியாதை மட்டும்தான் இருக்கு. உங்களுக்கு நான் எல்லாம் செட் ஆக மாட்டேன் சத்யா உங்களுக்குன்னு ஒரு பொண்ணு இருப்பா. நீங்க என்ன நினைச்சு தேவை இல்லாம உங்க கற்பனை வளத்துகிட்டா உங்களுக்கு கஷ்டம்தான் அதிகம் ஆகும். அதான் நான் அந்த எல்லைக்கு போக விட கூடாதுன்னு  நினைச்சு அப்படி பேசுன. ஆனால் உங்களுக்கு இப்படி ஆகும்ன்னு நான் கனவுல கூட நினைக்கல. ஐ ஆம் சாரி என்று சொன்னவள் அழ அவள் முகம் தக்காளி பழம் போல சிவந்தது

நீங்க எப்போவாது நம்ம ஆபிஸ்ல சிரிப்பிங்க அப்படி சிரிக்கிறப்போ உங்களோட முகம் சிவந்துடும். நான் எதாவது ஒரு மூலையில இருந்து அதை ரசிப்பேன் ஆனால் இப்போ உங்க முகம் சிவந்து இருக்கு ஆனால் எனக்கு உங்களை ரசிக்க முடியல. ப்ளீஸ் உங்களோட அழுகைய நிறுத்துங்க. எனக்கு ஒண்ணுமே ஆகல நான் ரொம்ப நல்லா இருக்கேன் எனக்கு எதாவது ஆகி அப்படி அழுதா கூட ஒரு நியாயம் உண்டு என்று சத்யா சொல்ல பூஜா அவனை இடைமறித்து பேசினாள்

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Opowieści tętniące życiem. Odkryj je teraz