வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -31

1K 49 5
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
புகை போல வெண் பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவா் சொல்லி கேட்பேன்
கடல் போன்ற கண்ணாலே
என்னை வாாி சென்றாளே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று
அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

சூர்யா போனை காட்ட தேவா போனையும் அவனையும் ஆச்சர்யமாக பார்த்தாள்.அதில் தேவா அனுப்பிய மெசேஜ் இருந்தது

இங்க வா வந்து உக்காரு இதை பத்தி பேசணும் என்று தேவாவை அழைத்தான்.

என்ன ஆச்சு இது நீ அனுப்புன மெசேஜ்தான இல்லை வேற யாராவது உன் போன் எடுத்து அனுப்பிட்டாங்களா. என்று கேட்டான் சூர்யா.தேவா அவனை பார்க்க தயாராக இல்லை அவள் தலை குனிந்து இருந்ததை பார்த்த சூர்யா அவளுடைய போனை எடுத்தான் ஆனால் அந்த போனில் மெசேஜ் இல்லை.

அதாவது நடந்த சம்பவத்தின் படி தேவா delete for everyone கொடுக்கறதுக்கு பதிலா delete for me கொடுத்துட்டா அதனாலதான் சூர்யா படிச்சிட்டான். (Me :இந்த மாதிரி மெசேஜ் மாத்தி டெலீட் பண்ணுறதெல்லாம் எங்க வீர வாழ்க்கையில சகஜம் 😎)

சூர்யா அந்த போனில் மெசேஜ் இல்லாததை பார்த்து ஆச்சர்யம் அடைந்தவன் அவளை பார்க்க தேவா அவனை பார்த்தாள் அவள் இமை கூட லேசாக அசைக்கவில்லை.சூர்யா பேச ஆரம்பித்தான்.

இரு இண்ணைக்கு மிஷன் கொடுக்க அமிர்தா பிரசாத் வந்துருந்தாங்கல்ல. அப்போ இது அமிர்தா பிரசாத் வேலையாதான் இருக்கும்.அதான் பாத்தேன் கவிதை எல்லாம் வந்துருக்கேன்னு. அமிர்தாதான் எதாவது கூகிள்ல தேடி இந்த கவிதை எடுத்து நீ அனுப்புன மாதிரி அனுப்பி இருப்பா நீ எதுவும் அவங்கள தப்பா எடுத்துக்காத நம்ம சேர்ந்து சந்தோசமா இருக்கணும்னுதான் அவங்க இந்த மாதிரி எல்லாம் பண்ணுறாங்க. இட்ஸ் ஓகே ஒன் சைட் லவ் கூட நல்லாத்தான் இருக்கு. நீ எதை நினைச்சும் குழப்பிக்க வேண்டாம் நீ எப்போவும் போல இரு. சரி இப்போ நம்ம சாப்பிட போலாம் என்னவோ இண்ணைக்கு கொஞ்சம் பசிக்குது என்று சொன்னவன் சாதாரணமாக செல்ல தேவா ஒன்றும் புரியாமல் அவன் செல்வதை பார்த்தபடி அப்படியே நின்றாள்.

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Où les histoires vivent. Découvrez maintenant