வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு-7

1.1K 39 43
                                    

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஏன்
படைத்தான் அந்த
இறைவன் என்று
கேட்டது பூக்களின்
இதயம்
மறு நாள் அந்த
செடியில் அந்த மலர்
வாடிய பொழுதில்
பட்டுக் கிடந்ததே
இறைவனின் மனமும்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

தேவா வயலுக்கு அருகில் உள்ள கோவிலில் உட்கார்ந்து இருந்தாள் .கோவில் என்றால் பெரிய மண்டபம் என்று சொல்ல முடியாது கட்டிடம் அல்லாமல் வெளி இடத்தில் உள்ள கோவில் அது .அங்கு யார் வேண்டும் என்றாலும் எப்போது வேண்டும் என்றாலும் வந்து பூஜை செய்து கொள்ளலாம் .அந்த கோவிலுக்கு தேவாதான் வந்து கோலம் போட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து வைப்பாள் .அவள் இல்லை என்றால் வேறு யாரிடமாவது கோலம் போட சொல்லி அனுப்பியாவது வைப்பாள் .அவளுக்கு ஊருக்குள் இருக்கும் இறைவனை காட்டிலும் இப்படி வயலுக்கு அருகில் இந்த அம்மன் மீதுதான் பாசம் ஜாஸ்தி .இதுவரை அவள் இந்த கடவுளிடம் வந்து தன்னுடைய வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது என்று அழுததும் இல்லை மாற்றி கொடு என்று கேட்டதும் இல்லை .அவள் மனதின் வலி இது என்று ஒரு நாள் கூட இறையவனிடம் சொன்னது இல்லை .பல நாள் அடி வாங்கிவிட்டு அந்த வலி உடன் இங்கு வந்து எல்லா இடத்தையும் சுத்தம் செய்து இருக்கிறாள் .இதுநாள் வரை அவள் இங்கு வந்து தன்னுடைய மனதில் இருக்கும் எந்த கவலையும் சொன்னது இல்லை ஆனால் இன்று அவள் தன்னுடைய மனதில் இருக்கும் வேதனை எல்லாவற்றையும் கடவுளிடம் பேச முடிவு செய்து விட்டாள் .மனதை புரிந்து கொள்ளாத மனிதர்களிடம் பேசுவதற்குதான் வார்த்தைகள் தேவை கடவுளிடம் பேச வார்த்தைகள் தேவை இல்லை .

யென் என்றால் தெளிவற்ற மனதை கொண்டு வாடும் ஒவ்வொருவரின் மனதின் குரலை கேட்கவே செய்கிறார் .பிரச்சனை வரும் நேரம் எல்லாம் ஏன் கடவுள் நம்மை மட்டும் ஏன் முள் பாதையில் கொண்டு செல்கிறார் என்று தோன்றும் .ஆனால் பிரச்சனை முடிந்த பிறகுதான் தெரியும் அந்த முள் பாதையில் நம் உடன் இருந்து கடக்க செய்ததே கடவுள்தான் என்று .நமக்கு ஒரு பிரச்சனை சொல்ல ஆள் இல்லை என்றால் மனதிலே கடவுளை நினைத்து கொண்டாலே போதும் .அவர் நிச்சயம் கேட்பார் .கடவுள் நெருப்பு சுடும் என்று வாழ்க்கை பாடத்தை கற்று கொடுப்பார் என்றும் அந்த நெருப்பில் நம்மை எரிய விட மாட்டார் .ஏன் தெரியுமா நாம் எல்லாம் கடவுளின் குழந்தைகள் [me; ஏன்னா நான் ஊருக்குள்ள இப்படித்தான் சொல்லிட்டு இருக்கேன் 😂😂😂😂.கடவுள் நம்பிக்கை மூட நம்பிக்கை ரெண்டும் வேற.எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு அதான் இந்த தத்துவம் மக்களே ]

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Donde viven las historias. Descúbrelo ahora