வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -39

900 41 9
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

பூஜாக்கும் ஜெய்க்கும் என்ன சொல்ல என்றே தெரியவில்லை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி மௌனமாக இருந்தார்கள். ஜெய் தைரியத்தை வரவைத்துவிட்டு பேச செல்லும் போது வெயிட்டர் ஆர்டர் எடுக்க வர அதனால் வேறு வழி இல்லாமல் தங்களுக்கு தேவையானதை சொன்னவர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

"அது அது அதுவந்து", என்று பேச முடியாமல் தடுமாறினான் ஜெய்.

"உங்களுக்கும் பதட்டமா இருக்கா ",என்று கேட்டாள் பூஜா. அவள் அப்படி கேட்டதும் தலை நிமிர்ந்து பார்த்தவன் ஆமாம் என்பது போல தலை அசைக்க அவனை பார்த்து சிரித்தவள," எனக்கும் ரொம்ப பதட்டமாதான் இருக்கு. என்னவோ எதுவுமே படிக்காம எக்ஸாம் ஹாலுக்கு வந்த மாதிரி", என்று பூஜா சொல்ல..

"பயங்கர படிப்ஸ்சா எக்சாம்ப்பில் கூட படிப்புதான் வருது ",என்று கேட்டான் ஜெய்.

"ம்ம்ம் அவ்ளோ படிப்ஸ்ன்னு சொல்ல முடியாது ஆனா கொஞ்சம் படிப்ஸ்தான்", என்று சொன்னாள் பூஜா.

"ம்ம் எப்படிங்க நீங்க திடிர்னு கால் பண்ணி அப்டி சொன்னிஙக ",என்று கேட்டான் ஜெய்.

"நான் என்ன சொன்ன?", என்று கேட்டாள் பூஜா.

அதான்.... என்று இழுத்தான் ஜெய்.எதான் என்றாள் பூஜா

"உங்களுக்கு தெரியும்தான ?',என்று கேட்டான் ஜெய்.

"ம்ம்ம் தெரியும் ஐ லவ் you சொன்னததான சொல்றிங்க ",என்று சாதாரணமாக கேட்டாள் பூஜா.

"என்ன இவ்ளோ சாதாரணமா சொல்றிங்க ",என்று கேட்டான் ஜெய்.

"உண்மையா சொல்லணும்ன்னா இப்போ கூட எனக்கு ரொம்ப பதட்டமாதான் இருக்கு. ஆனா நான் எந்த அளவுக்கு பதட்டமா இருக்கேன்னு காட்டிக்கல", என்று சொன்னாள் பூஜா.

"ஓ அப்படி... அது சரி என்ன எப்படி லவ் பண்ணுறேன்னு ஒத்துகிட்டிங்க. நான் எல்லாம் நீங்க என்ன லவ் பண்ணவே மாட்டீங்க நான் சாமியாரா போயிடுவேன்னுதான் நினைச்சேன் ",என்று சொன்னான் ஜெய். அவன் சொன்னதை கேட்டு சிரித்த பூஜா.

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Место, где живут истории. Откройте их для себя