வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -14

1.1K 55 55
                                    

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கண்ணிலே
இல்லையே காதலும்
நெஞ்சமே காதலின்
தாயகம்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

அன்றைய தினம் தேவாக்கு நன்றாகதான் சென்றது .தேவாவிடம் சூர்யா அவனுடைய கார்டு கொடுத்து தேவையான பொருள் எல்லாவற்றையும் வாங்கி கொள்ள சொன்னான் .சாயங்காலம் 3 மணி அளவில் துணி வாங்க வேண்டி கடைக்கு சென்றார்கள் தேவாவும் அமிர்தாவும் அவர்களுடன் வேறு யாரும் வரவில்லை மூன்று ஸ்டாப் தள்ளி உள்ள கடை என்பதால் அவர்கள் இருவரும்தான் சென்றார்கள் அந்த தெருவில் சூர்யாக்கு திருமணம் ஆன கதை எல்லாம் ஓடி கொண்டு இருந்தது .அவர்கள் இருவரும் கடைக்கு செல்வதற்கு முன்பாக சிலர் தேவாவை பார்த்துவிட்டு சென்றார்கள் அமிர்தா அவர்கள் யாரும் தேவாவை வருத்த படும்படி பேசாமல் பார்த்து கொண்டாள் .அமிர்தா அவர்கள் வழக்கமாக துணி எடுக்கும் கடைக்குத்தான் அழைத்து சென்றாள் .அங்கிருப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அமிர்தாவை தெரியும் அதுவும் செல்வியின் மகள் அபிநயா அங்கிருந்ததால் அவள் அமிர்தாவிடம் பேச வந்தாள் .

அக்கா இதுதான் சூர்யா அண்ணா வைப்பா என்று கேட்டாள் அபிநயா .

ஆமா என்று சொன்னாள் அமிர்தா .

அம்மா சொன்னாங்க அக்கா .கல்யாணம் ஆயிடுச்சுன்னு நான் கூட பாக்கணும்னு நினைச்சேன் .என்ன வாங்கணுமோ சொல்லுங்க நாங்க ஹெல்ப் பண்ணுறேன் இது ஒரு தங்கச்சியா என்னோட கடமை என்று அபிநயா படபடவென்று பேச அவளை பார்த்து புன்னகை செய்தாள் தேவா .

உங்க பேரு தேவதர்ஷினிதான.பாருங்க அமிர்தா அக்கா அண்ணா சூர்யா இவங்க தேவா நம்ம தளபதி படத்துல வர்ற மாதிரி தேவா சூர்யா பேர் பொருத்தம் வேற லெவல்ல இருக்குல்ல என்று சொன்னாள் அபிநயா .அவள் படபடவென்று பேசுவதை கேட்க தேவாக்கு வியப்பாக இருந்தது .

ஆமா ஆமா அருமையான ஜோடிதான் .சரி இப்போ என்ன பண்ணுற நம்ம புது பொண்ணுக்கு நல்ல ட்ரெஸ்க்கு எல்லாம் எடுத்து காட்டு வா என்று அமிர்தா சொல்ல அபிநயா அவளை அழைத்து சென்றாள் .

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]حيث تعيش القصص. اكتشف الآن